மூதாட்டி வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில்.. ஏபிவிபி முன்னாள் நிர்வாகி டாக்டர் சுப்பையா கைது
சென்னை: மூதாட்டியின் வீட்டின் முன் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏபிவிபி எனப்படும் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பின் முன்னாள் நிர்வாகியான டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் மருத்துவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பிரச்சியனானது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக அப்போதே ஏபிவிபி அமைப்பின் முன்னாள் நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது ஆதம்பாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பார்கிங் தொடர்பாக அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் வசிக்கும் மருத்துவர் சுப்பையாவுக்கும் மூதாட்டிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போதிலும் டாக்டர் சுப்பையா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவர் சுப்பையாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி சிறையில் இருந்த ஏபிவிபி நிர்வாகிகளைச் சந்தித்த விவகாரத்தில் சமீபத்தில் தான் இந்த டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications