கொங்கு கோட்டையில் ஓட்டை..திமுகவுக்கு தாவும் ’இளநீர்” பேமஸ் ஊர் அதிமுக மாஜி! அவரா? என்னங்க சொல்றீங்க?
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி வரும் முக்கிய புள்ளிகளை பட்டியல் தொடர்ந்து நீண்டு வருகிறது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவையில் மிகப் பிரபலமான முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவலாம் என்ன சொல்லப்படுகிறது. இளநீருக்கு பெயர் பெற்ற ஊரைச் சேர்ந்த அவர் தற்போது திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவருடன் இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாளுக்கு நாள் பல்வேறு விவகாரங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருக்கு உடன் நின்ற பலரே வெளியேறிவிட்டனர்.
அதிமுகவில் இருந்து திமுகவில் சேரும் படலமும் மிகத் தீவிரமாக அரங்கேறி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிருப்தியில் இருக்கும் பல முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து திமுகவுக்கு தாவி வருகின்றனர்.

அதிமுக
சமீபத்தில் கூட அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் என அந்த பட்டியல் பெரிதாகிறது. அதே நேரத்தில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வருபவர்களுக்கு உடனடியாக பதவி அளிக்கப்பட்டு உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் திமுக தலைமை மீது நம்பிக்கை வந்துள்ளதால் பலரும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற சேகர்பாபு, செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், தங்க தமிழ்செல்வன், தோப்பு வெங்கடாசலம், என பலரும் அமைச்சர்களாகவும், எம்பிக்களாகவும், மாவட்ட செயலாளர்களாகவும் இருக்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் 2026 தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களை அதிமுகவுக்கு அழைத்து வர அமைச்சர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக வலுவாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் இதனை மிகவும் சிரத்தையோடு மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து பலரும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி ஆதரவாளர்
ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிகுந்த தோப்பு வெங்கடாசலம் திமுகவில் தான் இணைந்துள்ளார். தற்போது செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவரையும் சில அமைச்சர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜெயலலிதா கால அரசியல்வாதியும், கொங்கு மண்டலத்தில் மிக முக்கிய புள்ளியும், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் திமுக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
கட்சி தாவல்
இரு அமைச்சர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் திமுகவுக்கு வந்தால் உரிய பதவி, வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, தேர்தலில் வென்றால் அமைச்சர் பதவி என பேசி வருகிறார்களாம் இளநீருக்கு பெயர் பெற்ற, கோவை மாவட்டத்தின் ஒரு ஒன்றியத்தின் பெயரை தனது பெயருக்கு முன்னால் வைத்திருக்கும் அந்த புள்ளியும் அதற்கு சம்மதித்ததாகவே சொல்லப்படுகிறது. இருந்த போதும் தற்போது அரசியல் சூழல்கள் சரியில்லாததால் திமுகவுக்கு செல்லலாமா? வேண்டாமா? என தீவிர ஆதரவாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெற்ற திமுகவுக்கு செல்லும் படலம் தொடங்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications