இவ்ளோ பேசியும்.. பதவி கிடைக்காமல் பரிதவிப்பு - ஓரம்கட்டப்படுகிறாரா அதிமுக முன்னாள் “மெயின்” அமைச்சர்
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ள நிலையில், அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் இடம்பெற்றாதது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Recommended Video
ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு முட்டுக்கட்டைகளை கடந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

துணை பொதுச்செயலாளர்கள்
இதனை தொடர்ந்து அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள துணை பொதுச்செயலாளர்களுக்கான பதவிகளை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக தலைமை நிலைய செயலாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அமைப்பு செயலாளர்கள்
பொன்னையன் அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், மாவட்ட செயலாளர்கள் ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெயர் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மயுத்த காலத்திலிருந்து எப்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இடையே மோதல் வெடிக்கிறதோ அப்போதெல்லாம் ஜெயக்குமார் அழுத்தமாக எடப்பாடிக்கு ஆதரவாக அழுத்தமான கருத்தை முன்வைப்பவர் ஜெயக்குமார். சமீபத்தில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமானபோது கூட ஜெயக்குமார்தான் முதன்முதலில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து வெளிப்படையாக பேசியவர்.

ஏமாற்றம்
நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஜெயக்குமாரிடம் எடப்பாடி தரப்பு, சமாதானம் செய்து சி.வி.சண்முகத்துக்கு வாய்ப்பு வழங்கியது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அமைந்தவுடன் தனக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு இன்று வெளியான நிர்வாகிகள் பட்டியல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பட்டினப்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications