திருப்பூர் தெற்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.டி. தங்கவேல் கொரோனாவிற்கு மரணம்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.டி.தங்கவேல் கொரோனாவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 69. கேடி தங்கவேலுவிற்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கே.டி தங்கவேலு கடந்த 2011-2016 ஆம் ஆண்டு திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாள்களாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கே.டி. தங்கவேல். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 2.24 மணியளவில் மரணமடைந்தார்.
மரணமடைந்த கே.டி தங்கவேல் இறுதிச் சடங்கு திருப்பூர் ஆத்துப்பாளையம் ரோடு மின் மயானத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 11 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகமான, திருப்பூர் அவிநாசி ரோடு தியாகி பழனிச்சாமி நிலையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications