இதுதான் ஸ்டாலின்! RM வீரப்பன் உடல் 78 குண்டுகள் முழங்க தகனம்! தேர்தல் ஆணைய ஒப்புதலுடன் அரசு மரியாதை!
சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று, ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதை வழங்கியுள்ளது தமிழக அரசு.
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர் ஆர்.எம். வீரப்பன். சாதாரண குடும்பத்தில் பிறந்து தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தும், நாடக கம்பெனிகளில் பணியாற்றியும் வந்த ஆர்.எம்.வீரப்பன் பெரியார், அண்ணா ஆகியோரால் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு தன்னை அரசியலில் இணைத்துக் கொண்டு பணியாற்றினார்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் திரைப்பட கம்பெனியின் மேலாளராக பணியாற்றத் தொடங்கி எம்ஜிஆரின் வலது கரமாய், நம்பிக்கைக்கு பாத்திரமானவராய் திகழ்ந்தவர். எம்ஜிஆர் திரையுலகில் உயர்ந்திடவும், பல திரைப்படங்களில் வெற்றிகளை அடைந்திடவும் துணை நின்றவர். பிறகு சத்யா மூவீஸ் எனும் திரைப்பட நிறுவனத்தை துவங்கி எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களை கொண்டு ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்தவர்.
எம்ஜிஆரின் அமைச்சரவையில் அறநிலையத் துறை போன்ற முக்கிய துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தார் ஆர்.எம்.வீரப்பன். தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பணியாற்றினார். அதிமுகவில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் நீக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார்.

அதன் பிறகு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டார். இதையடுத்து, தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார் ஆர்.என்.வீரப்பன். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவால் நேற்று காலமானார் ஆர்.எம்.வீரப்பன். அவருக்கு வயது 98.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆர்எம் வீரப்பனின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

சென்னையில் உடல்நலக்குறைவால் நேற்று காலமான அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. அவரது இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே, ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் விடுத்த செய்திக் குறிப்பில், "5 முறை அமைச்சராகவும் மூன்று முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ள ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆர்.எம். வீரப்பனின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் மின் மயானம் சென்றடைந்ததும், நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் அவரது உடலுக்கு 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு வலது கரமாகத் திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்கு நிகழ்விற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அரசு மரியாதை வழங்க, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து, ஒப்புதல் பெற்று, 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பனின் இறுதி நிகழ்வை நடத்தியது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
அண்மையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்தபோது, அவர் மீதான அன்பினால், முதல்வர் ஸ்டாலின், அவருக்கு மிகச்சிறந்த மரியாதையை அரசு சார்பில் அளித்து பிரியாவிடை கொடுத்தார். கருணாநிதி மறைந்தபோது கண்ணீருடன் பேசிய விஜயகாந்த்தை நினைவுகூர்ந்து, இதுவரையிலான விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து, மிகச்சிறப்பான மரியாதையை அளித்தார் முதல்வர் ஸ்டாலின். அதுபோலவே, மறைந்த மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கும் உரிய மரியாதை அளித்துள்ளார் ஸ்டாலின்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications