காலையிலேயே ஷாக்.. சென்னை புறநகரில் ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக பலி.. என்ன நடந்தது!
சென்னை: சென்னை புறநகரில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவிலேயே சிறந்த பொது போக்குவரத்து கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. குறிப்பாகச் சென்னையில் பஸ், ரயில், விமானம் என அனைத்து வகையான போக்குவரத்தும் சிறப்பாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக நீண்ட தூரப் போக்குவரத்தில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முதல் சாய்ஸ் என்றால் அது ரயில்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
விபத்து: அதேநேரம் ரயில் நிலையத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அங்கே கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மோசமான விபத்துக்கள் ஏற்படும். அப்படியொரு மோசமான விபத்து சென்னை புறநகர்ப் பகுதியான பொன்னேரியில் நடந்துள்ளது.
சென்னை புறநகர்: சென்னையில் தாம்பரத்தை அடுத்து இருக்கும் பொன்னேரியில் இன்று காலை 4 பேர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். காலை நேரம் என்பதால் ரயில் அருகே வந்தது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் தண்டவாளத்தைக் கடக்கும் முன்பே ரயில் அவர்கள் மீது மோதி உள்ளது. இதன் காரணமாக அந்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரயிலைக் கடக்க முயன்று உயிரிழந்தோர் சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) விரைவு பிரணவ் (23), சதீஷ் (39) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த இந்த தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். அங்கே பெயிண்டிங் வேலை முடிந்த நிலையில், 4 பேரும் சொந்த ஊருக்குச் செல்லவிருந்தனர்.
என்ன நடந்தது: இதற்காக அவர்கள் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தனர். அப்போது தான் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிலையில், நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கி உள்ளனர்.
தண்டவாளங்களைக் கடப்பது ரொம்பவே ஆபத்தானது என்பதால் தண்டவாளங்களைக் கடக்கக்கூடாது என்றே ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருந்த போதிலும் சிலர் அந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், பாவம் இது அவர்கள் உயிரையே பறித்தும் விடுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications