பட்டா மாறுதல் செய்யணுமா? போலி ஆவணங்கள், மோசடி பத்திரத்தை ரத்து செய்வது யார்? வழக்கம்போலவே விசாரணையா?
சென்னை: பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்தில், அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
எந்தவொரு நிலத்தை வாங்கி விற்பதற்கும், பத்திரங்கள் என்பது கட்டாயமானது என்றாலும், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள், ஏதாவது கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் ஹைகோர்ட்டுக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்த நிலையில், இந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அதிகாரம்: எங்காவது மோசடி தென்பட்டால், பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச்சட்ட மசோதாவை, கடந்த 2022 ஆகஸ்ட் 16 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு பிறகு, 12000 மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டதுடன், சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தி, ஆயிரக்கணக்கான பத்திரப்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டன
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழ்நாடு அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த புகார் மனுவில் உள்ளதாவது:
பத்திரப்பதிவு: "தமிழக அரசு 2022-ம் ஆண்டு பத்திர பதிவுச்சட்டத்தில் மாவட்ட பதிவாளரே ரத்து செய்யலாம், அதுதொடர்பான மேல்முறையீட்டை பத்திர பதிவு துறை தலைவரே விசாரிக்கலாம் என அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆனால், இது தன்னிச்சையானது. பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்து வருகிறது. அதனால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி வாதிடும்போது சொன்னதாவது:
விதிமுறைகள்: "இந்த புதிய சட்ட திருத்தத்தின்கீழ் எந்த வழிமுறையோ, விதிமுறைகளோ, வழிகாட்டு நெறிமுறைகளோ வகுக்கப்படவில்லை. சொத்துக்கு சம்பந்தம் இல்லாத 3-வது நபர் புகார் அளித்தாலும், அதன்பேரில் பத்திர பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு ஏகபோக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், நிறைய துஷ்பிரயோகம் நடக்கிறது.
90 வயது மூதாட்டியின் பெயரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது... இந்த விசாரணையை மாவட்ட பதிவாளர் எப்படி நடத்த வேண்டும்? அதற்கான காலவரம்பு என்ன? என்பதற்கு எந்த விதியும் வகுக்கப்படவில்லை. சொத்தின் உரிமை தொடர்பான ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்.. இது இயற்கை நீதிக்கு புறம்பானது. இந்த சட்ட திருத்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என வாதிட்டார்...
அவகாசம்: இதுதொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு அறிந்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக ஏப்ரல் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டிருந்தனர். இந்த விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும் வரை மோசடி பத்திர ரத்து அதிகாரத்தை பயன்படுத்த தடை விதித்துவிட்டதால், இதன் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்க போகிறதோ? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது..
விசாரணை: ஆனால், இதுகுறித்து பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் சொல்லும்போது, மோசடி பத்திர ரத்து அதிகாரத்தை பயன்படுத்த மட்டுமே, ஹைகோர்ட் தடை விதித்திருக்கிறது. இதில் ஏற்கனவே, எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து எதுவுமே சொல்லவில்லை..
எனவே, மோசடி பத்திர ரத்து புகார்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் பணிகள் வழக்கம் போலவே நடந்து வருகின்றன. பதிவுத்துறை தலைவர் சார்பில், டிஐஜி ஒருவர் இந்த புகார்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications