அடையாறு டூ ஆதம்பாக்கம்.. சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்! கவனம் மக்களே
சென்னை: தமிழக மின்வாரியம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) சென்னையில் பராமரிப்ப பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னையில் அடையாறு, ஆதம்பாக்கம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

அதன்படி இன்று சென்னையில் சில இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டேன்ஜெட்கோ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 19.08.2024 (இன்று) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அடையாறு, ஆதம்பாக்கம் பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி அடையாறு பகுதியை பொறுத்தமட்டில் 1வது அவென்யூ, சாஸ்திரி நகர், எல்பி சாலையின் ஒரு பகுதி, பரமேஸ்வரி நகர் பகுதி, பத்மநாப நகர் 1வது மற்றும் 3வது தெரு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்ட உள்ளது.
அதேபோல் ஆதம்பாக்கம் பகுதியை எடுத்து கொண்டால் சோலையப்பன் தெரு, யூனியன் கார்பைடு காலனி, புழுதிவாக்கம் மெயின் ரோடு, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, எம்பி ராஜகோபால் தெரு, பகத்சிங் தெரு, ஆறுமுகம் தெரு, செங்கல்வராயன் தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதனால் மேற்கூறிய இடங்களில் வசித்து வரும் மக்கள் மின்சாதன பொருட்கள் மூலம் செய்ய வேண்டிய பணிகளை இன்று காலை 9 மணிக்கு முன்பாகவே திட்டமிட்டு முடித்து கொடுப்பது நல்லது. இல்லாவிட்டால் மின்சாதன பொருட்களை மதியம் 2 மணிக்கு பிறகு தான் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications