கோவை முதல் கன்னியாகுமரி வரை.. காங்கிரஸ் நிர்வாகிகளே கனவிலும் நினைக்காத பஞ்சாயத்து
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 28 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. ஆனால் இதில் வேட்பாளர்கள் யார் என்ற போட்டியால் கதர் சட்டைகளுக்குள் கடும் சண்டையே வந்தது.. ஒவ்வொருவரும் இந்த முறை எப்படியாவது சீட் வேண்டும் என்று டெல்லி வரை முயற்சித்தனர். அதில் சிலருக்கு சாதகமாகவும், பலருக்கு பாதகமும் நடந்துள்ளது. திடீரென அதிர்ஷ்டம் அடித்தது போல் புதுமுகங்களுக்கும் வாய்ப்புகள் வந்தது.. ஒட்டுமொத்தமாக காங்கிரஸில் எப்படி இருந்தது என்பதை பார்ப்போம்.
தேர்தலில் போட்டியிடும் முன்பே அதிருப்தியில் உள்ள நிர்வாகிளுடன் சண்டை போடுவதே பெரிய தலைவலியாக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் நடக்கிறது. முதலில் கோவை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிப்போம். இந்த முறை காங்கிரஸ் கட்சிக்காரர்களின் கண்களை நம்ப முடியாத அதிசயம் என்றால் 2021 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில் உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீநிதிக்கு கோவை சிங்காநல்லூரில் போட்டியிட சீட் கிடைத்தது தான். காங்கிரஸ் கட்சியில் ஸ்ரீநிதி இணைந்த பிறகு, கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் அவர் போட்டியிட சீட்டும் கிடைத்திருக்கிறது. பல நாட்களாக சீட் கிடைக்கும் என்று காத்திருந்த கதர் சட்டைகளுக்கு டெல்லி மேலிடத்தின் இந்த முடிவு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு நேரடியாக டெல்லி தலைமையே சீட்டை கொடுத்ததால் நொந்து போயிருக்கிறார்கள்.

கவுண்டம்பாளையம்
அதே கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி பாஜக எப்படியும் வாங்கி ஜெயித்துவிடலாம் என்று பாஜக நம்பியது.. ஆனால் அந்த தொகுதியை எடப்பாடி பழனிசாமி தரவில்லை. ஒருவேளை கவுண்டம்பாளையம் கிடைத்திருந்தால் அண்ணாமலை போட்டியிட்டிருப்பார். ஆனால் அந்த தொகுதி கிடைக்காததால் அவர் போட்டியிடவில்லை... அப்படியே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கவுண்டம்பாளையம் ஒதுக்கப்பட்டது. இது திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. தலைவரே என்ன இப்படி பண்ணிட்டீங்க.. நாம் ஜெயிக்க நல்ல வாய்ப்பு இருந்தது என்று உடன்பிறப்புகள் போராட்டத்திலேயே குதித்தனர். இது திமுகவில் நிலவரம் என்றால், காங்கிரஸ் கட்சியில் கவுண்டம்பாளையம் தொகுதியில் புதுமுகமான இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்ய பிரகாஷ் வேட்பாளராகியுள்ளார். இதுவுமே பல வருடமாக ஏக்கத்தில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ட்விஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது.
வேளச்சேரி
கடந்த முறை கடும் போட்டிக்கு பின்னரே ஹசன் மௌலானா வேளச்சேரியில் ஜெயித்தார். எனவே இந்த முறை தனக்கு எப்படியும் சீட் கிடைக்கும் என்று மகிளா காங்கிரஸ் செயலாளர் ஹசினா சையத் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு வழங்கப்படவில்லை..
மயிலாடுதுறை
அதேபோல் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் அடிப்படையில் மயிலாடுதுறை தொகுதியில் ஜமால் யூனுஸ் முகமது அறிவிக்கப்பட்டார். இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு சீட் கிடைக்கவில்லை. தஞ்சாவூரைச் சேர்ந்த ஜமால் யூனுஸ் முகமது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் வேட்பாளர் கடைசி வரை மாற்றப்படவில்லை.. இதனால் அங்கு சீட் எதிர்பார்த்த அன்பழகன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் நடிகர் போஸ் வெங்கட் போட்டியிட விரும்பினார். ஆனால் வழக்கம் போல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், திருநாவுக்கரசரின் மகனுமான ராமச்சந்திரனுக்கே காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு தந்துள்ளது. 50 வருடங்களாக திமுக ஜெயிக்காமல் உள்ள தொகுதியாக அறந்தாங்கி தொடர்கிறது. இதனால் திமுகவினர் விரக்தியில் உள்ளார்கள்.
ஈரோடு கிழக்கு
ஈரோட்டை பொறுத்தவரை ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஊட்டி தொகுதியில் உயிலட்டி ராமச்சந்திரன் என்பவர் டெல்லியில் லாபி மூலம் சீட்டை வாங்கினார்.. இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ கணேஷ், மூன்றாவது முறையாக போட்டியிட வாய்ப்பு இல்லாததால் விரக்தி அடைந்துள்ளார்.
பொன்னேரி - விளவங்கோடு
சென்னைக்கு பக்கத்தில் உள்ள பொன்னேரியில் போட்டியிட மாநில எஸ்.சி., எஸ்.டி பிரிவுச் செயலாளர் ரஞ்சன் குமா விரும்பினார். ஆனால், மீண்டும் துரை.சந்திரசேகருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள தொகுதி.. இங்கு சி.எஸ்.ஐ தென்கேரளா செயலாளரான டி.டி.பிரவீன் போட்டியிடுகிறார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் நிர்வாகிகளே கொதிக்கிறார்கள். அதேபோல் கன்னியாகுமரியில் குளச்சல் சிட்டிங் எம்.எல்.ஏ-வான பிரின்ஸுக்கு சீட் கிடைக்கவில்லை. கிருஷ்ணகிரி தொகுதிக்கு டாக்டர் செல்லக்குமார் வேட்பாளர் ஆனதை உள்ளூர் நிர்வாகிகள் பலரும் ஏற்காமல் விரக்தியில் உள்ளார்கள்.
பென்னாகரம்
பென்னாகரம் தொகுதியை பொறுத்தவரை திமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பசேகரன் போட்டியிட விரும்பினார். ஆனால் ஜி.கே.மணியின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான தமிழ்க்குமரன், காங்கிரஸ் கட்சியில் இணைந்து சீட் வாங்கி உள்ளார். கிட்டத்தட்ட பாமகவிற்கு சீட் கிடைத்தது போல் உள்ளது. இதனால் தி.மு.க உள்ளூர் நிர்வாகிகள் அப்செட் ஆனார்கள்
மேலூர்
காங்கிரஸ் கட்சியில் 28வது தொகுதியாக மேலூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு கடும் போராட்டத்திற்கு பின்னரே நடந்தது. இங்கு விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், தன் மாமனார் ஆலாத்தூர் ரவிச்சந்திரனுக்கும், முன்னாள் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் தன் மகனுக்கும் சீட் கேட்டும் வந்தார்கள். ஆனால், ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும், காஞ்சிபுரத்தின் முன்னாள் எம்.பி-யுமான விஸ்வநாதனுக்கு சீட் கிடைத்துள்ளது. அங்கும் உள்ளூர் கதர்சட்டைகள் அப்செட்டில் இருக்கிறார்கள்.
-
களத்திற்கே போகாத காங்கிரஸ்.. ராகுல் எட்டிக்கூட பார்க்கல.. அறிவாலயத்தை சீண்டும் ‘கை’.. ஸ்டாலின் சினம் -
வளைகுடா போரால் கேரளாவில் தோற்கும் காங்கிரஸ்? இது என்ன புதுசா இருக்கு.. ராகுல் பாவம் தான் -
இலவச மழையில் புதுச்சேரி: யார் டாப்? விஜய்? ரங்கசாமி? காங்கிரஸ் பிழைக்குமா? -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன?












Click it and Unblock the Notifications