ஷாக்! உயிருக்கு உலைவைக்கும் ரசீதுகள்! ஏடிஎம், கடை, ஓட்டலில் ‛பில்’ வாங்குபவரா நீங்கள்? உஷார் மக்களே!
சென்னை: ஏடிஎம், ஓட்டல் முதல் மளிகை கடை வரை நாம் வாங்கும் ‛பில்' எனும் ரசீதுகள் நமக்கே தெரியாமல் நமது உயிரை உறிஞ்சி உலைவைத்து விடும் தன்மை கொண்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் இது முற்றிலும் உண்மை தான். அது எப்படி என கேட்கிறீர்களா? இதோ உங்களுக்கான விளக்கம்.
இன்றைய காலக்கட்டத்தில் நாம் கடைகள், ஓட்டல்கள் என எங்கு சென்று பொருள் வாங்கினாலும் பில் (ரசீது) கேட்கிறோம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஏடிஎம் மையங்களில் கூட பணம் எடுத்த பிறகு மெஷினில் இருந்து வரும் பில்லை எடுத்து நமது வங்கி கணக்கில் இன்னும் எவ்வளவு தொகை உள்ளது என்பதை பார்த்து கொள்கிறோம்.
மேலும் பில் வாங்குவது என்பது நமது அடிப்படை உரிமையாக உள்ளது. இதனால் தான் பில் என்பது நம்மை விட்டு பிரியாத ஒன்றாக மாறிவிட்டது. இவ்வாறு வழங்கப்படும் பில் என்பது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை தான்.
அதாவது தற்போது கடைகள், ஓட்டல்கள், ஏடிஎம் இயந்திரங்களில் நமக்கு வழங்கப்படும் பில் எனும் ரசீதை நன்றாக பாருங்கள். அது மிகவும் பளபளப்பாக பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இந்த அழகான பில்லில் தான் ஆபத்து நிறைந்துள்ளது. இந்த ரசீதுகள் தெர்மல் பேப்பர் பில்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த பில்கள் பிபிஏ எனும் பிஸ்பீனால் - ஏ (BPA or bisphenol-A) மற்றும் பிபிஎஸ் எனும் பிஸ்பீனால்- எஸ் (BPS or Bisphenol - S) எனும் ரசாயனங்கள் மூலம் உருவாக்கப்படுகின்ற.

இந்த கெமிக்கல்ஸ் தான் தெர்மல் பேப்பர் பில்களை திடமாகவும், வெப்பத்தை எதிர்க்கும் தன்மையுடனும் மாற்றுவதோடு, மை இல்லாமல் அச்சிடவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறது. இது தொழில் ரீதியாக புரட்சியாக இருந்தாலும் கூட உடலுக்கு நோய் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ரசாயனங்களால் தான் அந்த பில்கள் மிகவும் பளபளப்பாக இருக்கின்றன. இது தான் உடலுக்கு ஆபத்தானவை.
இந்த ரசானங்கள் பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் பிசின்கள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நிலையில் தெர்மல் காகித வகை பில்களில் இந்த ரசாயனங்கள் கோட்டிங் முறையில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு சேர்க்கப்படும் பிபிஏ ரசாயனம் காற்றில் பரவும் தன்மை கொண்டது. மேலும் ரசீதை கையில் வைத்திருப்பவரின் வழியாக தோலுக்குள் பரவி உடலுக்குள் ஊடுருவி பிரச்சனைகளும் ஏற்படுத்துமாம்.
பொதுவாக இந்த ரசாயனங்கள் உயிரணு உற்பத்தியை குறைப்பதோடு, நீரிழிவு நோய், புற்றுநோயை கூட உருவாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. மேலும் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது. இதனால் இத்தகைய ரசீதுகளை நாம் கையில் வாங்கினால் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
இதனால் தான் ஐரோப்பா ஒன்றியம், கனடா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளிலும், அமெரிக்காவின் சில மாநிலங்களில் மக்களின் பாதுகாப்பு கருதி சில இடங்களில் இந்த பில்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் இந்த பில்கள் பயன்பாட்டில் உள்ளன. முன்னதாக கண்ணூர் பல்கலைக்கழகம் 2013ல் செய்த ஆய்வில் இந்தியாவில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து வரும் பில்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது அது ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் பிரச்சனைகளை உருவாக்கலாம் என எச்சரித்து இருந்தது.
மேலும் ஹார்வர்ட் பப்ளிக் ஹெல்த் பல்கலைக்கழகத்தில் 2015ல் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது 2 மணிநேரம் கையுறைகள் ஏதுமின்றி இந்த ரசீதுகளை கையாள்வது என்பது உடலுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதோடு இந்த ரசீதுகளை மண்ணில் வீசுவதன் மூலம் அது உற்பத்தி திறனையும் பாதிக்கும் என்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும் கூட இத்தகைய பிரச்சனைகளை இருப்பதால் நாம் ரசீது வாங்காமல் வர முடியாது. மாறாக நாம் நமது உடலை பாதுகாப்பதில் அதிக கவனம் செய்யலாம். அதன்படி கடை, ஓட்டல்களில் பிபிஏ எனும் பிஸ்பினால்-ஏ கோட்டிங் ரசீதுகளை நீங்கள் பெறாமல் மின்னணு முறையிலான ரசீதுகளை பெற முயற்சிக்கலாம். இது பல இடங்களில் இல்லாமல் இருக்கலாம்.
அப்படியென்றால் நீங்கள் வாங்கும் பில்களில் பளபளப்பான பகுதியை தொடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது இந்த வகை பில்களை பெறும்போது பளபளப்பான பகுதியை உள்பக்கமாக இருக்கும்படி வாங்க வேண்டும். மேலும் ரசீது பெற்ற பிறகு உங்களின் கைகளை நன்கு கழுவ வேண்டும். இது வாடிக்கையாளராக இருந்தால் சரி, மாறாக ரசீது வழங்குவது தான் உங்கள் பணியாக இருந்தால் நீங்கள் கையுறைகள் பயன்படுத்தலாம்.
மேலும் இந்த ரசீதை பெற்ற பிறகு நீங்கள் சானிடைசரால் கைகளை கழுவுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறி செய்தால் அது உங்களின் உடலுக்கு இன்னும் தீங்காக மாறும். ஏனென்றால் சானிடைசர் பயன்படுத்திய கைகளின் தோல் வழியாக இந்த ரசாயனம் மிக வேகமாக உடலுக்குள் ஊடுருவி விடுமாம். இதனால் பில் வாங்கிய பிறகு சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.
இதுமட்டுமின்றி இந்த பிபிஏ எனும் பிஸ்பினால் ஏ ரசாயனம் காற்றில் பரவும் தன்மை கொண்டது. இதனால் இத்தகைய பில்களை நாம் நமது சட்டை பை, பர்ஸ், ஹேண்ட்பேக்குகளில் சேமித்து வைப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என ஆய்வாளர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications