நடந்த உண்மைகள் என்ன? சீறிப்பாய்ந்த உதயநிதி.. தயாநிதியும் விடலையே.. "நிதியால்" தகித்த ஆளுநர் ரவி!
சென்னை: பொதுவாக தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக ஆளுநர் ஆர். என் ரவி ஏதாவது பேசுவார். அதற்கு திமுக பதிலடி கொடுக்கும். இதுதான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த முறை ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக திமுக நேரடியாக புகார்களை வைக்க தொடங்கி உள்ளது.
ஆளுநர் ஆர். என் ரவியை விமர்சிக்கும் விதமாக திமுகவின் டாப் தலைவர்கள் அடுத்தடுத்து பேச தொடங்கி உள்ளனர். சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் ஆர். என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில், கல்வி என்பது உரிமை, அந்த உரிமையை பாதுகாப்போம். மாணவ மாணவியரின் கல்வி உரிமையை நாங்கள் பாதுகாப்போம். தமிழ்நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களுக்கு நன்றி.
தண்ணீர் கூட குடிக்காமல் கொலபட்டினி உண்ணாவிரதம் இருந்துள்ளனர் திமுகவினர். இந்த வலி பெரிய வலி இல்லை, 21 உயிர்கள் போய்விட்டது, அதை விட பெரிய வலி இல்லை. அனிதா தொடங்கி 21 பேர் பலியாகி விட்டனர். தமிழ்நாட்டிற்கு பாஜக என்ற கட்சியே தேவையற்றது நீட் மரணம் எல்லாம் தற்கொலை இல்லை. 21 பேரும் தற்கொலை செய்யவில்லை .
நீட் மரணம் எல்லாமே கொலை: இதை செய்தது ஒன்றிய பாஜக அரசு. அதற்கு உறுதுணையாக இருந்தது அடிமை அதிமுக எடப்பாடி அரசு. நீட் தேர்வுக்கு முடியும் வரை எங்கள் போராட்டம் தொடரும். காலை முதல் நாம் போராடி வருகிறோம். நீட் தேர்வை அகற்றாமல் நாம் விட மாட்டோம்.

போராடினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும், தகுதி நீக்கம் செய்வார்கள் என்று அதிமுகவினர் சொன்னார்கள்.எங்களுக்கு எதிராக அதிமுகவினர் புகார் கூட கொடுத்தனர். அமைச்சர் பதவி போனால் கூட பரவாயில்லை , நீட்டை எதிர்ப்பு நான் போராடுவேன். ஆளுநர் யார்? நீட் மசோதாவை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல நீங்கள் யார்?
ஆளுநர் அவர்களே Who are you? நீங்கள் வெறும் போஸ்ட்மேன் ஆளுநரே. ஆளுநர் ரவிக்கு ஒரு சவால் விடுகிறேன்.. அரசியல் பேச வேண்டும் என்றால் அரசியலில் நில்லுங்கள். தமிழ்நாட்டில் தேர்தலில் நில்லுங்கள், நான் சவால் விடுகிறேன். உங்களுக்கு எதிராக நாங்கள் கடைக்கோடி தொண்டரை நிறுத்தி வெற்றிபெற வைப்போம்.உங்களை மக்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள்.
அந்த தேர்தலில் வென்றால் உங்களுடன் சேர்ந்து நானும் நீட் தேர்வை ஆதரிக்கிறேன். தயாரா? ஆளுநரை கேள்வி கேட்ட அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். ஆளுநரை கேள்வி கேட்டால் மிரட்டுவார்களா?. அம்மாசியப்பனுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்.. என்ன பண்ணுவீங்க? என்னிடம் பயாஸுதீன் என்று மாணவர் கேள்வி கேட்டார். நீங்க ஆர். என் ரவி இல்லை. ஆர்எஸ்எஸ் ரவி. மறக்காதீங்க. உங்களை மட்டுமல்ல வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டுவோம், என்று உதயநிதி ஸ்டாலின் ஆளுநரை விமர்சனம் செய்து கடுமையாக பேசினார்.
தயரநிதி மாறன்: உதயநிதி பேச்சின் வீச்சு அடங்கும் முன்பே எம்பி தயாநிதி மாறன், ஆளுநர் ஆர். என் ரவி மீது கடும் விமர்சனங்களை வைத்தார். அதன்படி ஆளுநர் ஆர். என் ரவி அரசின் நிதியை தனது மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டினார். அதேபோல் ஊட்டி ராஜ்பவனை தனது மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தினார் என்றும் குற்றச்சாட்டினார்.
ஆளுநர் விளக்கம்: திமுகவின் இந்த திடீர் அட்டாக் மோட் காரணமாக திகைத்து போன ஆர். என் ரவி தற்போது "நடந்த உண்மைகள்" என்ற தலைப்பில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ஆளுநர் அவர்களின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திரு. தயாநிதி மாறன், மக்களவை உறுப்பினர் பொதுவெளியில் குற்றம்சாட்டியதாக மேற்கோள்காட்டி ஆகஸ்ட் 24, 2023 அன்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் தவறானவை என்பதுடன், விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால், நடந்தவை பொது வெளியில் அறியப்பட வேண்டும்.

நடந்த உண்மைகள்:
•மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பிப்ரவரி 21 - 23, 2022 அன்று ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தினார்.
மாண்புமிகு ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ் பவனில் யாரும் தங்கவில்லை.
•விருந்தினர்கள் மட்டுமன்றி மாண்புமிகு ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கும் கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு
அமர்த்தப்பட்டன. அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. • தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் ராஜ் பவன் சமையலறை, விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட
பயன்படுத்தப்படவில்லை.
• முழு நிகழ்வுக்கான விளக்கொளி வசதிகள் ராஜ் பவனில் இல்லாமல் ஒரு தனியார் மூலம் செய்யப்பட்டன.
மலர் அலங்காரத்துக்கான பூக்கள் கூட சந்தையில் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டன.
• முழு நிகழ்வுக்கான பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டனர். ராஜ் பவன் ஊழியர்கள் எவரும் பயன்படுத்தப்படவில்லை.
• விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் மாண்புமிகு ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.
மாண்புமிகு ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் மாண்புமிகு ஆளுநரே ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மாண்புமிகு ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது, என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications