சென்னை, காஞ்சி உள்பட 6 மாவட்டங்களில் இன்று முழு முடக்கம்.. கறிக்கடை கிடையாது, காய்கறியும் கிடையாது
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று முழு முடக்கம் அமலில் இருக்கிறது. அதாவது பால் விநியோகம் மற்றும் மருந்து விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையும் 1025 ஆக உள்ளது. சென்னையில் நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் கடந்த 19-ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கெனவே 5ஆவது கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் போது ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

காய்கறி கடை
மளிகை, காய்கறிக் கடைகள் திறப்பு நேரம் மதியம் வரை என குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதாவது கடந்த 21-ஆம் தேதியும் இன்றைய தினம் 28-ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் அறிவித்திருந்தார்.

போக்குவரத்து
அதன்படி இன்றைய தினம் பால் விநியோகம் மற்றும் மருந்து விற்பனைக்கு மட்டுமே அனுமதி உண்டு, ஏனைய காய்கறி கடைகள், கறி கடைகள், மளிகை கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்டவைகளை திறக்க அனுமதி இல்லை. அது போல் பால், மருந்து, மருத்துவத்திற்கான அத்தியாசியத்திற்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த இரு முழு ஊரடங்குகளில் கறிக்கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனினும் மக்கள் சனிக்கிழமை அன்றே கறி, காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி பிரிட்ஜில் வைத்து விட்டனர்.

வெறிச்
மேற்கண்ட கடைகளில் நேற்றைய தினம் கூட்டம் அலைமோதியது. இன்றைக்கு தேவையான பொருட்களை மக்கள் நேற்றே வாங்கி வைத்தனர். இதனால் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. இன்றைய தினம் மேற்கண்ட 6 மாவட்டங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications