பரந்தூர் விவகாரம்: “நிரூபிச்சு காட்டுங்க.. நிலத்தை இலவசமாகவே தர்றோம்”.. தவெகவுக்கு ஜி ஸ்கொயர் சவால்
சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அரசு தீவிரம் காட்டுவதன் பின்னணியில் வேறு லாபம் இருக்கும் என தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருந்தார். தவெக செய்தி தொடர்பாளர் ஜெகதீசனும், விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஜி ஸ்கொயர் நிறுவனம், பண்ணூர் கிராமத்தில் 900 ஏக்கர் நிலம் வைத்துள்ளதாக கூறினார். இதற்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்த நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், பரந்தூரில் விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், தவெக செய்தி தொடர்பாளர் ஜெகதீசன், தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசுகையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் பண்ணூர் கிராமத்தில் 900 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெகதீசன் அளித்த குற்றச்சாட்டிற்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜி ஸ்கொயர் விளக்கம்
ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் எங்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு எந்த நிலமோ சொத்தோ இல்லை எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எங்கள் வணிகப் போட்டியாளர்கள் மூலமாகவே பல உண்மைக்கு புறம்பான செய்திகள் பல தளங்களில் பரப்பப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறோம். இது உங்கள் கட்சி மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை பொதுமக்களின் பார்வையில் களங்கப்படுத்தக்கூடும். இதுபோன்ற தவறான தகவல்களை எதிரிகள் தொடர்ந்து பரப்புவதால் அன்புக்குரிய தமிழக வெற்றிக் கழக முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டதே 2012ல் தான்
பண்ணூர் கிராமத்தில் மொத்தமே 800 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளன. பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் கிராமங்களில் 1 முதல் 440 வரை சர்வே எண்கள் உள்ளன. இந்த சர்வே எண்களில் பதிந்துள்ள நில உரிமையாளர்களின் பெயர்களை தமிழ்நாடு அரசு நிலப் பதிவேடு மற்றும் சர்வே போர்ட்டலில் பார்க்க முடியும்.
மேலும் 2006 முதல் 2011 வார இந்த மூன்று கிராமங்களிலும் அந்த நிலங்களின் பதிவுகள் நடந்து முடித்து விட்டன. ஆனால் ஜிஎஸ்கொயர் நிறுவனமோ 2012-ல் தான் தொடங்கப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் அங்கு நிலங்களை கையகப்படுத்தி உள்ளது என்ற வாதம் உண்மையற்றது.

மொத்தமாக நிகழ்ச்சி நடந்த 43 நிமிடங்களில் சரியாக 21:00 முதல் 23:00 நிமிடத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் பண்ணூர் கிராமத்தில் 900 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளதாக தவறாக உங்களால் தெரிவிக்கப்பட்டது.
நிரூபித்தால் இலவசமாக மாற்றிக் கொடுக்கத் தயார்
"பண்ணூர் கிராமத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை". இதற்குப் பிறகும் பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் எங்கள் ஜி ஸ்கொயர் பெயரிலோ அல்லது எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவரின் பெயரிலோ உள்ளதாக உண்மையான தகவல் அளித்தால், அந்த நிலத்தை நீங்கள் அடையாளம் காட்டும் நபருக்கு இலவசமாக மாற்றிக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தவெக தலைவர் விஜய் பேசிய அன்றே, ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட விளக்கப் பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவின் பரந்தூர் புதிய விமான நிலைய விரிவாக்கப் பகுதியில் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. எங்கள் நிறுவனத்திற்கு எந்தக் கட்சியுடனும் எந்த அரசியல் தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் களத்தில் அனல் ஏற்றும் விஜய்… சென்னையில் 3 தொகுதிகளில் இன்று அதிரடி பிரசாரம்! -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
தவெகவில் அடுத்த விக்கெட் கோவை தெற்கு.. ஆப்சென்டான வேட்பாளர்.. சம்பவம் செய்த நாம் தமிழர் -
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
"அனல் பறக்கும் களம்.. ஆளை காணோம் விஜய்!" டூப் முதல் ஹாலோகிராம் வரை.. தவெகவின் 'சமாளிப்பு' அரசியல்! -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
விஜய்யை பார்க்க வீட்டில் சொல்லாம கொள்ளாம வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 5 பவுன் செயின் திருட்டு! -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே! -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய்












Click it and Unblock the Notifications