சென்னையில் இன்று முதல் 3 நாட்கள்.. ஜி 20 நாடுகளின் சுற்றுச் சூழல் மாநாடு!
சென்னை: ஜி20 நாடுகளின் சுற்றுச் சூழல், பருவநிலை அமைச்சர்கள் கூட்டம் சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பான மத்திய அரசின் செய்திக் குறிப்பு: 4-வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டம் சென்னையில் இன்று முதல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பு நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

இதையொட்டி மத்திய மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் பிவாஷ் ரஞ்சன், கூடுதல் செயலாளர் திரு நரேஷ்பால் கங்வார், கூடுதல் செயலாளர் ரிச்சா ஷர்மா ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தப் பணிக்குழு கூட்டத்தின் 3 வது நாள் ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் சந்திப்புடன் நிறைவடையும். இதில் பயன்கள் மற்றும் தலைமைத்துவ ஆவணங்கள் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சர்கள் நிலைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 35 அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர்கள் கூறினர்.
என்ன ஆலோசனை?: இந்தப்பணிக்குழுவின் முந்தைய 3 கூட்டங்கள், மெய்நிகர் அமர்வுகளும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டன. இந்திய தலைமைத்துவத்தால் அடையாளம் காணப்பட்ட 3 விரிவான கருப்பொருள்கள் குறித்து கூட்டாகவும், அனைவரையும் உள்ளடக்கியும் விவாதங்கள் நடந்துள்ளன. சூழல் சீர்கேட்டை தடுத்தல், பல்லுயிர் பெருக்கத்தை வளப்படுத்துதல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை விரைவுபடுத்துதல் ஆகிய கருப்பொருள் முன்னுரிமைகளையொட்டி விவாதங்கள் நடைபெற்றன. மேலும் நிலையான மற்றும் பருவநிலையை தாங்கும் கட்டமைப்பு, நீல பொருளாதாரம், வளப்பயன்பாடு, சுழற்சிப் பொருளாதாரம் ஆகியவை பற்றியும் விவாதங்கள் நடைபெற்றன. பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் பல பரிமாண சவாலை சமாளிக்க உதவும் மூல காரணத்தை அடையாளம் காண்பது மற்றும் உலகளாவிய தீர்வுகளை அடையாளம் காண்பதை இந்த விவாதங்கள் மையமாகக் கொண்டிருந்தன. 4-வது பணிக்குழு கூட்டத்தின்போது, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை என்ற இரண்டு விரிவான தடங்களின் கீழ் பயன் ஆவணங்கள் குறித்த விவாதம் இவற்றுக்கு இணையாக நடைபெற உள்ளது. ஜூலை 28-ம் தேதி நடைபெறும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் இது குறித்த விவாதங்கள் நிறைவடையும்.
இந்த அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பருவநிலை மாற்றத் துறையில் உலகளாவிய நிபுணர்களின் முக்கிய உரைகள் இடம்பெறவுள்ளன, இது இந்நாளின் பிற்பகுதி நடவடிக்கைகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். இதைத் தொடர்ந்து முக்கியமாக ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் நிலையிலான விவாதங்கள் நடைபெற்று, உயர்நிலை கொள்கைகள் ஆவணம் ஏற்கப்படும்.
2-வது நாள் கூட்டம்: நிகழ்வின் 2 வது நாளில் வளப்பயன்பாடு, சுழற்சிப் பொருளாதார தொழில் கூட்டணி தொடங்குவது 4 வது பணிக்குழு, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டம் ஆகியவற்றின் சிறப்பம்சமாக இருக்கும். உலகளாவிய சுழற்சி நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் நாடுகள், தொழில்துறைகள் மற்றும் வல்லுநர்களை ஒன்றிணைப்பதே கூட்டணியின் நோக்கமாகும். இந்த முன்முயற்சி ஜி 20 இந்திய தலைமைத்துவத்தின் போது ஒரு முக்கியமான சாதனையாக மாறும்,
மாமல்லபுரம் விசிட்: கூட்டத்திற்குப் பின் நடைபெறும் அமைச்சர்கள் கூட்ட நிகழ்வில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் உன்னதமான கலாச்சார மற்றும் வரலாற்று சிறப்புகள் இடம்பெறும். பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் காட்சிகளின் மூலம் பிராந்தியத்தின் வளமான பாரம்பரியங்களை வெளிப்படுத்துவது இந்த கலாச்சார விழாவின் நோக்கமாகும். அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, புகழ்பெற்ற நகரமான மகாபலிபுரத்தைப் பார்வையிடும் வாய்ப்பைப் பிரதிநிதிகள் பெறுவார்கள். இந்த இடம் யுனெஸ்கோவின் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு நினைவுச்சின்னத்தின் உலக பாரம்பரிய தளமாக கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பிரதிநிதிகளுக்கு இரவு உணவின் போது நடைபெறும் 'சம்வாத்' என்று அழைக்கப்படும் சிறப்பான மாலைநேர விருந்தளிக்கப்படும். இது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். ஏனெனில் இது பிராந்திய உணவு வகைகளின் பரிமாறலைக் கொண்டிருக்கும். இதனால் தமிழ்நாடு வழங்கும் மாறுபட்ட மற்றும் சுவையான உணவுகளை பங்கேற்பாளர்கள் ருசிப்பார்கள்.
ஜி 20 இந்தியா தலைமையின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது, இது பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலின் ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சனைகளை லட்சியத்துடனும், தீர்க்கமான முறையிலும் சமாளிப்பதற்கான இந்திய அரசின் பார்வையைப் பிரதிபலிக்கிறது. வருங்கால சந்ததியினருக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கூடுவதால் அனைவரின் பார்வையும் இந்த பணிக்குழுவின் நிறைவுக் கூட்டத்தின் மீது உள்ளது. இந்திய ஜி-20 தலைமை, நம்மை பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications