மதம் பிடித்த யானை.. சென்னையை நோக்கி வரும் கஜா புயல்.. இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது.
சென்னை: வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது. இதற்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
தற்போது புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் டெல்டா பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கஜா புயல் இன்னும் 2 நாட்களில் தமிழகத்தை தாக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டதே சுவாரசியமான விஷயம் ஆகும்.
[பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து சந்திரபாபு நாயுடவிடம் திமுக கேட்காதது ஏன்- முதல்வர் கேள்வி]

புயல் பெயர்
இந்திய பெருங்கடலில் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கும் 2000ல் தொடங்கியது. ஆனால் இது முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 2004ல்தான். புயல் ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும் அதற்கு பெயர் வைக்கப்படும். இந்த பெயர்களை குறிப்பிட்ட நாடுகள் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கும்.

எந்த நாடுகள்
இந்திய பெருங்கடல் பகுதிகளை சுற்றி ஏற்படும் புயலுக்கு சில நாடுகள் மட்டுமே பெயர் வைக்க முடியும். வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, ஓமான், பாகிஸ்தான் , மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே பெயர் வைக்க முடியும். இந்த முறை தமிழகத்தில் ஏற்படும் புயலுக்கு கஜா என்று தாய்லாந்துதான் பெயர் வைத்தது.

எப்படி தேர்வு
இந்த பெயர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருக்கும். அடுத்த புயல் ஏற்படும் போது, இந்த நாடு வைத்த பெயர் பயன்படுத்தப்படும் என்று ஒரு வரிசைப்படி இந்த பெயர் வைக்கும் செயல் நடந்து வருகிறது. உதாரணமாக வர்தா புயல் பாகிஸ்தான் வைத்த பெயர் அதன்பின் மருதா என்ற புயலுக்கு தாய்லாந்து வைத்த பெயரும், மோரா என்ற புயலுக்கு இலங்கை வைத்த பெயரும் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் வங்கதேசம் வைத்த ஓகி என்ற புயல் வந்தது. தற்போது தாய்லாந்து வைத்த கஜா என்ற புயல் வந்துள்ளது. இன்னும் இரண்டு புயலுக்கு பின் மூன்றாவது புயலுக்கு இந்தியா வைத்த பெயரான வாயு என்று பெயர் பயன்படுத்தப்படும்.

என்ன சிறப்பு
தற்போது தமிழகத்தை தாக்க உள்ள புயலுக்கு கஜா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துதான் இந்த பெயரை வைத்தது. கஜா என்றால் யானை என்று பொருள். சரியாக இந்த மதம் பிடித்த யானை தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications