கஜா புயல் பாதிப்பு.. தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து
கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. புயலின் தொடக்க கட்ட பாதிப்புகள் இப்போதே தொடங்கி உள்ளது.

புயலில் இருந்து மக்களை காப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் முக்கியமான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை - சென்னை உழவன் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி - தஞ்சை சிறப்பு கட்டண ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி - காரைக்கால், காரைக்கால் - தஞ்சை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் - சென்னை ரத்து செய்யப்பட்டுள்ளது., சென்னை - மன்னார்குடி ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி - சென்னை ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications