கஜா புயல் பாதிப்பு.. அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் திடீர் ஆலோசனை!
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video

சென்னை: கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தின் பெரிய பேரிடர்களில் ஒன்றாக கஜா புயல் உருவாகி உள்ளது. இதன் இழப்புகளை சமாளிக்க பல்லாயிரம் கோடிகள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. டெல்டா மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. அங்கு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்ய வேண்டிய சீரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆலோசனை நடக்கிறது.
ஆலோசனையில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம், உதயகுமார், வீரமணி பங்கேற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், அதிகாரிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் நிவாரண நிதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நாளை முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications