"கேம் சேஞ்சர்".. கனிமொழியா? தமிழரசியா?.. குறுக்கே வந்த செந்தில் பாலாஜி.. ஸ்டாலினின் அல்ட்ரா பிளான்
சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிக்குள் இரண்டு முக்கிய தலைவர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. மூன்றாவதாக ஒரு தலைவர் இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுகவில் உட்கட்சி தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது.
72 மாவட்டங்களில் மொத்தம் 45 மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 27 மாவட்டங்களில் பலர் மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் பல இடங்களில் போட்டி வாபஸ் பெறப்பட்டு போட்டியின்றி மாவட்ட செயலாளர்கள் தேர்வானார்கள்.
இந்த நிலையில்தான் கட்சியில் காலியாக உள்ள ஒரு துணை பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

துணை பொதுச்செயலாளர்
ஆக்டிவ் அரசியலில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி இருக்கிறார். திமுகவில் இருந்து விலகியவர், மொத்தமாக அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து உள்ளார். அவர் திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரின் விலகல் காரணமாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதை நிரப்புவதற்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. திமுக எம்பி கனிமொழியை இந்த பதவியில் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தன.

மகளிரணி
மகளிரணிக்கு புதிய செயலாளரை நியமனம் செய்துவிட்டு கனிமொழிக்கு இந்த முக்கியமாக பொறுப்பை கொடுக்கலாம். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு அரசியல் கிசு கிசுக்கள் வெளியாகின. கனிமொழி கட்சியில் இன்னும் பெரிய பொறுப்புகளை பெறலாம். மகளிரணியை விட பெரிய பொறுப்புகளை அவருக்கு வழங்கலாம். அதனால் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று செய்திகள் வந்தன. கனிமொழிக்கு பெண்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.

தென் மண்டலம்
தென் மண்டலத்தில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கனிமொழி துணை பொதுச்செயலாளர் ஆனால் அது திமுகவிற்கு பலம் சேர்க்கும். இது போக பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியான இன்னொரு நபர் என்று கூறப்படுபவர் செந்தில் பாலாஜி. அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் திமுகவின் முகமாக இருக்கிறார். கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக வெற்றிபெற செந்தில் பாலாஜிதான் காரணம். கரூரிலும் செந்தில் பாலாஜி அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார்.

சேலம்
பாஜக, அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக செந்தில் பாலாஜி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பாகவே செந்தில் பாலாஜிக்கு முக்கியமான பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. அவருக்காக திமுகவில் சிறப்பு பதவி உருவாக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் அவர் மேலும் வலிமை அடைவார். திமுகவிற்கு அவர் கொங்கு மண்டலத்தில் முக்கிய முகமாக இருப்பார்.

கொங்கு
மூன்றாவதாக இதில் நுழைந்து இருக்குஇம் நபர் தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தாய் சேர்ந்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி இந்த போட்டி லிஸ்டில் இணைந்து உள்ளார். தேவேந்திர குல வேளாளர் வாக்குகளை எப்படியாவது அள்ள வேண்டும் என்று பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் முயன்று வருகின்றன. பிரதமர் மோடியே தன்னை நான் நரேந்திரர்.. நீங்கள் தேவேந்திரர் என்று அழைக்க இது முக்கியமான காரணமாக இருந்தது.

திமுக
திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்தியாக இவர்களின் வாக்குகள் உள்ளன. தேவேந்திரர் குல வேளாளர் கவரவே சமீத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தின் போது உதயநிதி ஸ்டாலின் தென் மண்டலத்திற்கு சென்றார். இந்த நிலையில்தான் தமிழரசியை துணை பொதுச்செயலாளர் ஆக்கினால் அது மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும். இந்த நிலையில்தான் ஸ்டாலின் டிக் அடிக்க போகும் அந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications