ஓபிஎஸ் மகன் பற்றி பிரதமரை பார்த்து புகார் சொல்வேன்! அசராத காயத்ரி தேவி! பின்னணியில் இருப்பது யார்?
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது, டிஜிபியை நேரில் சந்தித்து பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த காயத்ரி தேவி என்ற பெண், சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பிரதமரை நேரில் சந்தித்து புகார் சொல்வேன் எனக் கூறியிருக்கிறார்.
பிரதமர் என்றால் யார், அவருக்கு அன்றாடம் இருக்கும் பணிகள் என்ன, பிரதமரின் ஒவ்வொரு நிமிடத்துக்கும் இருக்கும் வேல்யூ என்ன என்பதை காயத்ரி தேவி தெரிந்து சொன்னாரோ தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை, ஆனால் எடுத்த எடுப்பிலேயே நான் பிரதமரை பார்ப்பேன் என சென்னையில் நடந்த பிரஸ்மீட்டில் ஆவேசம் காட்டியிருக்கிறார்.

தமிழக டிஜிபியிடம் புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை, நான் பிரதமரை சந்திப்பேன் என காயத்ரி தேவி எடுத்த எடுப்பிலேயே கூறியிருப்பது பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என்ற கேள்வியையும், சந்தேகத்தையும் செய்தியாளர்கள் மத்தியில் எழுப்பியது. உங்கள் பின்னால் நிற்கிறவர்கள் எல்லாம் யார் என செய்தியாளர்கள் வினவினர்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது, எனது பின்னணியில் யாரும் கிடையாது என பதிலளித்த காயத்ரி தேவி, நான் தனி நபராக தான் இந்த வழக்கை எதிர்கொள்ளப் போகிறேன் என்றும் நான் எனது வழக்கறிஞரை மட்டும் தான் அழைத்து வந்தேன், அவருக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் எனவும் காயத்ரி தேவி விளக்கம் அளித்தார்.
இதனிடையே நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மருமகளும், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பியின் மனைவியுமான ஆனந்தி தன்னை அலைபேசி மூலம் அழைத்ததாகவும், அப்போது என்ன இப்படி செய்துவிட்டீர்கள் என்னிடம் கூறியிருக்கலாமே எனக் கேட்டதாகவும் அதற்கு உங்களிடமும், ஓபிஎஸ்ஸிடமும் சொல்லி எந்த பயனும் இல்லாததால் காவல்துறையில் புகார் அளித்தேன் எனக் கூறியதாகவும் காயத்ரி தேவி கூறினார்.
ரவீந்திரநாத் எம்.பி. மீதான பாலியல் தொல்லை குறித்த புகார் மீது தமிழக காவல்துறை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறிய காயத்ரி தேவி, கடந்த வாரம் வரை தனக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ரவீந்திரநாத் எம்பி தன்னை வாட்ஸ் அப் காலில் அழைத்து தன்னிடம் ஆபாசமாக பேசினார் என்பதும் திருமணம் செய்துகொள்வதாக கூறி தகாத முறையில் பேசினார் என்பதும், வீடியோ காலில் வரச்சொல்லி நள்ளிரவை கடந்தும் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு அளித்தார் என்பதும் காயத்ரி தேவியின் பிரதான புகாராகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications