சினிமால இருந்து விலகினால்.. தகரம் கட்சியை தொடங்குவீர்கள்.. அவ்வளவுதான்.. சூர்யாவை விமர்சித்த காயத்ரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் ஆடை அல்ல என்றும் சினிமா துறையில் இருந்து வெளியேறினால் தகரம் என்ற கட்சியைத் தொடங்குவீர்கள் என்றும் நடிகர் சூர்யாவை காயத்ரி ரகுராம் கிண்டல் செய்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021 ஆம் ஆண்டு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்குள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படவுள்ளன.

இயக்குநர்கள்

இயக்குநர்கள்


இந்த சட்டத் திருத்தத்திற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல என தெரிவித்திருந்தார். மேலும் மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என சூர்யா தெரிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இதற்கு பாஜக நிர்வாகியான காயத்ரி ரகுராம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல. கருத்து சுதந்திரம் நமக்குத் தேவை ஆனால் நம் தேசத்துக்கும், நமது கலாச்சாரத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமைதியைக் குலைக்க அதை தவறாகப் பயன்படுத்த முடியாது.

இந்தியா

இந்தியா

உதாரணமாக, நீங்கள் மோடி ஜிக்கு எதிராக செல்வது என்ற பெயரில், நீங்கள் இந்தியாவிற்கும் மக்களுக்கும் எதிராக செல்கிறீர்கள் எல்லாவற்றுக்கும் உங்கள் பொது வாழ்க்கை மற்றும் புகழுக்காக. உங்கள் பேச்சில் நல்ல நடிப்பைத் தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. Punch dialogue பதிலாக உண்மைகளுடன் பேசுங்கள்.

Recommended Video

    Surya குடும்பம் DMK கரை வேட்டி கட்டிக்கலாம் - Gayathri Raguramm | Oneindia Tamil
    கைதட்டல்கள்

    கைதட்டல்கள்

    இது திரைப்படத் துறையை எந்த வகையில் பாதிக்கிறது? விசில் மற்றும் கைதட்டல்களுக்கு இளம் மனதை சிதைப்பது முக்கியமல்ல. தேச பாதுகாப்பு முக்கியம். தேசபக்தி முக்கியமானது. உண்மை முக்கியமானது. பொய் மூட்டைகளுடன் அரசியலுக்கு வரவிரும்பினால் நீங்கள் வெல்ல மாட்டீர்கள்.

    புகழ்

    புகழ்

    மோடிக்கு எதிராக பேசி புகழை தேடுவது பழைய பேஷன். யாரும் உங்களை நம்பமாட்டார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் தமிழக அரசு குறித்து பேசுங்கள் பார்க்கலாம்? தமிழகத்தில் மின்தடை, மணல் கொள்ளை, பொதுமக்களை தாக்குவது உள்ளிட்ட விஷயங்களை தட்டிக் கேளுங்கள் பார்ப்போம் என்றார் காயத்ரி.

    தகரம்

    சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகுவேன் என சூர்யா கூறியுள்ளதற்கு "வெளியேறிய பிறகு நீங்கள் தகரம் கட்சியைத் தொடங்குவீர்கள்.. அவ்வளவுதான்" என அவரது அகரம் பவுண்டேஷனை கிண்டல் செய்தும் ட்வீட் போட்டுள்ளார். ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யும் அகரம் பவுண்டேஷன் சூர்யாவுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+