சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷாவை போய் சந்தியுங்கள்.. இஸ்லாமிய குருமார்களுடன் நடந்த சந்திப்பு.. ரஜினிகாந்த் தந்த அட்வைஸ்!

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக இஸ்லாமிய குருமார்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக இஸ்லாமிய குருமார்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    மீண்டும் மீண்டும் கேட்ட செய்தியாளர்கள்.. அதே வார்த்தையை சொல்லி தப்பித்த ரஜினி.. - வீடியோ

    குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு பின் நாடு முழுக்க போர்க்களமாக மாறியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி, வண்ணாரப்பேட்டை தொடங்கி நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. சிஏஏ போராட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் பெரிய சர்ச்சையானது.

    ரஜினிகாந்த் தனது பேட்டியில், ரஜினி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் என மக்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக தூண்டிவிடுகின்றனர். அவர்களை மக்கள் நம்ப கூடாது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, என்று குறிப்பிட்டார்.

    சந்தித்தார்

    சந்தித்தார்

    ரஜினியின் இந்த தொடர் பேச்சு தமிழகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதையடுத்து வரிசையாக ரஜினிகாந்த் இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து வருகிறார். கடந்த வாரம் இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதில் அவர் ரஜினியிடம் சிஏஏ குறித்து பேசினார்.

    அடுத்த சந்திப்பு

    அடுத்த சந்திப்பு

    அதன்பின் ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்களை ரஜினி சந்தித்தார். காஜா முயீனுத்தீன் பாகவி, அப்துல் அஜீஸ் பாகவி, இல்யாஸ் ரியாஜி, அன்வர் பாதுஷாஹ், முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, ஆகிய தலைவர்களை ரஜினி சந்தித்தார். அதில் சிஏஏ குறித்து ரஜினியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன். உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று ரஜினி உறுதி அளித்துள்ளார்.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சிஏஏ சட்டம் தொடர்பாக இஸ்லாமிய குருமார்களை சந்தித்தேன். அந்த சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது.மிக முக்கியமான சந்திப்பு. அவர்கள் சொல்வது, எதிர்பார்ப்பது ஒன்றுதான். அவர்கள் அன்பு, அமைதி, சகோதரத்துவம் பற்றிதான் பேசுகிறார்கள். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றார். அதற்கு நாங்கள் எதுவும் செய்ய தயார் என்று கூறினார்கள்.

    என்ன உதவி

    என்ன உதவி

    என்னை உதவும் படி கூறினார்கள். நான் கண்டிப்பாக உதவுவதற்காக கூறினேன். சிஏஏ மற்றும் என்பிஆர் மூலம் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க சொன்னேன். இஸ்லாமிய அரசியல்வாதிகள் இல்லாமல் குருமார்கள் எல்லோரும் சேர்ந்து ஆலோசிக்கும்படி கூறினேன். அவர்கள் எல்லோரையும் பாஜக தலைவர்களை சென்று சந்திக்கும்படி கூறினேன்.

    மோடி எப்படி

    மோடி எப்படி

    பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர்கள் சந்திக்கலாம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு அவரை போய் சந்தியுங்கள். அவரிடம் பேசுங்கள் என்று கூறினேன். நீங்கள் பேசினால், அவர் கேட்பார். அதற்கு நல்ல மரியாதை இருக்கும். அதுதான் நல்லது. அதற்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் நான் கண்டிப்பாக செய்வேன் என்று குறிப்பிட்டேன், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Get Appointment and Meet Amit Shah, says Rajinikanth to Islamic Leaders on CAA protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X