இனி ரேஷன் கடையிலும் ஏடிஎம்! 24 மணிநேரமும் அரிசி வாங்கலாம்: மத்திய அரசு அன்னபூர்த்தி ஜாக்பாட் திட்டம்
சென்னை: இந்திய உணவு பாதுகாப்பு துறையும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து "அன்னபூர்த்தி" தானிய ஏடிஎம், ரேஷன் விநியோக முறையை ஏற்படுத்தியுள்ளன.. 24 மணி நேரமும் செயல்படும் இந்த மெகா பிளான் மூலம், இனி வரிசையில் நிற்காமல் துல்லியமான எடையில் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்... இது பொதுமக்களுக்குக் கிடைத்த மாபெரும் ஜாக்பாட் ஆகும்.. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு உணவு பொருட்களை எந்த வித தடையுமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் வழங்கும் நோக்கில் "அன்னபூர்த்தி" என்ற தானிய ஏடிஎம் திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது..

தானிய ரேஷன்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் மற்றும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்புத் துறை இணைந்து உருவாக்கியுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், ரேஷன் விநியோக முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..
வழக்கமாக ரேஷன் கடைகளில் நிலவும் நீண்ட வரிசை, ஊழியர்களின் விடுமுறை, எடையில் முறைகேடுகள் மற்றும் தரமற்ற பொருட்கள் போன்ற நீண்டகாலப் புகார்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்..
தானிய ஏடிஎம் இயந்திரம்
இந்த தானிய ஏடிஎம் இயந்திரமானது வங்கிகளில் நாம் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.. இதன் செயல்பாட்டு முறை மிகவும் எளிமையானது மற்றும் பாதுகாப்பானது.. பயனாளிகள் இயந்திரத்தின் திரையில் தங்களது ரேஷன் கார்டு நம்பர் அல்லது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்..
அதன் பிறகு, முறைகேடுகளை தவிர்க்க விரல் ரேகை அல்லது கண் விழித்திரை மூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யப்படுகிறது.. இந்த சரிபார்ப்பு முடிந்ததும், அந்தப் பயனாளிக்கு மாதம் எவ்வளவு அரிசி, கோதுமை அல்லது பருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் திரையில் தோன்றும்.. பயனாளி தனக்கு தேவையான அளவை தேர்ந்தெடுத்தவுடன், இயந்திரத்தின் கீழ் பகுதியில் பையை வைத்தால் சில வினாடிகளில் துல்லியமான எடையில் தானியங்கள் வழங்கப்படுமாம்..
ஸ்பெஷாலிட்டி
இந்த திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இது 24 மணி நேரமும் செயல்படக்கூடியது.. இதனால் கூலித் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் தங்களுக்கு வசதியான நேரத்தில் ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்..
ஒரு நிமிடத்திற்கு 25 கிலோ முதல் 50 கிலோ வரை தானியங்களை வழங்கும் திறன் கொண்ட இந்த இயந்திரம், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு 99.9 சதவீதம் துல்லியமான எடையை உறுதி செய்கிறது..
மேலும், இவை குறைந்த மின்சாரத்தில் இயங்கும் வகையிலும், சூரிய மின்சக்தி மூலம் செயல்படும் வகையிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளன.. பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுவதால் தகுதியான பயனாளிகள் மட்டுமே பொருட்களைப் பெற முடியும் என்பதும், போலி ரேஷன் கார்டுகள் முழுமையாக தடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது..
மத்திய அரசு ஜாக்பாட் அறிவிப்பு
இந்தியாவின் முதல் ஆட்டோமெட்டிக் ஏடிஎம் ஹரியானா மாநிலம் குருகிராமில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது..
இதனைத் தொடர்ந்து ஒடிசா, உத்தரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.. இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித்ஷா இத்திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.. விரைவில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இந்த இயந்திரங்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
பயோமெட்ரிக் முறை
நம்ம தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை அமலில் உள்ளது.. இருப்பினும், இந்தத் தானிய ஏடிஎம் இயந்திரங்களைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவது குறித்து தமிழக உணவுத் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது..
இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் பொது விநியோக முறை உலகிலேயே மிகச சிறந்த மற்றும் வெளிப்படையான தொழில்நுட்பத் திட்டமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மொத்தத்தில் ஏழை எளிய மக்களின் தேவைகளை மிக விரைவாகவும், நேர்மையாகவும் பூர்த்தி செய்ய இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்..
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications