தவெகவுடன் பேச்சு.. உள்ளாட்சியில் பங்கு.. புதிய குண்டை இறக்கிய காங்கிரஸ்.. கண் சிவந்த ஸ்டாலின்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணி தீவிரம் காட்டுகிறது. திமுக - காங்கிரஸ் இடையே அவ்வபோது பனிப்போர் நிலவுகிறது. ஆட்சியில் பங்கு, தவெக பாசம் என காங்கிரஸ் தனி டிராக்கில் பயணித்து திமுகவிடம் கூடுதல் தொகுதி கேட்டு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கிறது. இருப்பினும் திமுக கறாராக தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர், கூடுதல் தொகுதிகளை கேட்பது எங்கள் இலக்கு. நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்ஜிஓ நடத்தவில்லை என்பதுடன் உள்ளாட்சியில் பங்கு என்கிற புதிய குண்டை இறக்கியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேக நேர்காணலில், "கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக எங்களை நேரடியாக அழைக்கவில்லை. அவர்களின் அழைப்புக்காக காத்திருக்கிறோம். கனிமொழி மரியாதை நிமித்தாகவும், கூட்டணியை நல்ல வழியில் கொண்டு செல்வதற்காகவும் சந்தித்தோம். அவர் எங்கள் கட்சி தலைமையுடன் தொடர்பில் உள்ளார். எங்களின் எண்ணங்களை அவரிடம் பகிர்ந்துள்ளோம்.

உள்ளாட்சியில் பங்கு
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியை பெறுவதுதான் காங்கிரஸ் கட்சியின் இலக்கு. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும் உள்ளாட்சியில் பங்கு குறித்தும் திமுகவுடன் பேசி வருகிறோம். மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அளவிலான அதிகாரங்களை பகிர்வதாக திமுக கூறியுள்ளது. உள்ளாட்சியில் அதிகாரத்தை பகிர்வதில் திமுகவுக்கு தயக்கம் இல்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என்று எந்தக் கட்சி சொல்லாது. நாங்கள் கட்சி நடத்துகிறோம். என்ஜிஓ நடத்தவில்லை. அரசியலில் மகிழ்ச்சி என்றோ, ஏமாற்றம் என்றோ எதுவும் இல்லை. நடக்கும் எல்லாவற்றுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கு, எண்ணம் இருக்கும். மக்கள் அதை ஏற்கிறார்களா என்பதுதான் முக்கியம். தேர்தல் முடிவு அதை தீர்மானிக்கும்.
தவெக ஆதரவு
நான் கேள்விப்பட்ட வரை 40 வயதிற்குட்டோர் மற்றும் இளைஞர்களிடம் தவெக விஜய்க்கு ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று தான் நினைக்கிறேன். தவெக எங்களை நேரடியாக கூட்டணிக்கு அழைத்தனர். எங்களுடன் கூட்டணி அமைத்து கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். களத்தில் எங்கள் பலம் என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளனர்.
ஆனால் தற்போது நாங்கள் கூட்டணி தொடர்பாக திமுக தலைமையுடன் மட்டுமே பேசி வருகிறோம். திமுக இப்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடங்கியுள்ளது. அவர்களுடன் தான் பேசி வருகிறோம். அரசியலில் நீங்கள் எல்லோருடனும் தகவல் தொடர்பில் இருந்துதான் ஆக வேண்டும். பரம எதிரிகள் கூட பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். ஏதாபவது நிகழ்ச்சியில் அதிமுகவினரை பார்த்தால் வணக்கம் வைத்துக் கொள்வோம்.
திமுகவுக்கு அழுத்தமா
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல காலம் பிறக்கிறது. நாங்கள் 140 வருடங்கள் பழமையான கட்சி. நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளோம். எங்கள் எப்போதும் பொறுமையுடன் இருப்போம். தமிழ்நாடு அரசியல் சிலபஸ் மாறிக் கொண்டிருக்கிறோம். இதை சரியாக அறிந்து செயல்படுவோர் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 12 - 20 சதவீதம் வாக்கு வங்கி இருக்கிறது. 22,000 கிராம குழுக்களை அமைத்துள்ளோம். 63,000 பூத் கமிட்டி முகவர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் வரவேற்பால் ராகுல் காந்தி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். எங்கள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவுடன் நல் உறவில் இருக்கிறார். அதற்காக அவரை யாரும் விமர்சிக்க கூடாது. நாங்கள் ஏன் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அது உண்மையில் திமுகவுக்கு அழுத்தமாக இருக்கும் என்று நம்பவில்லை. நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அதற்கு ஆம் இல்லை என்று பதிலை திமுக முடிவு செய்யும்" என்றார்..
-
எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்? -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்












Click it and Unblock the Notifications