கருப்பு ஷாலை கழற்றி வைத்தால் தான் அனுமதி.. சென்னை ஸ்டாலின் நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு கொடுமை!
சென்னை: தமிழக தொல்லியல் துறை சார்பில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இன்று நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இந்த விழாவில் கருப்பு உடை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, கருப்பு நிற ஷால் அணிந்து சென்ற மாணவிகளும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து மாணவிகள் கருப்பு ஷாலை கழற்றி வைத்துவிட்டு விழாவில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று தொடங்கியது. சென்னை சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

இந்த நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். கருப்பு நிற உடைகள் அணிந்து பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதோடு கருப்பு நிறத்திலான பொருட்களை மாணவ-மாணவிகள் உள்பட யாரும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அதாவது நிகழ்ச்சியில் பங்கேற்க கருப்பு நிற உடை அணிந்து வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுபற்றி முன்பே அறிவிக்கப்படவில்லை. இதனால் சில மாணவிகள் எதார்ததமாக கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்தனர். அவர்களையும் சோதனை செய்தவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

கருப்பு நிற உடை அணிந்து செல்ல அனுமதியில்லை என்று கூறி அவர்களை வெளியே நிறுத்தினர். இதையடுத்து மாணவிகள் கருப்பு நிற துப்பட்டாவை கழற்றி வெளியே வைத்துவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதேபோல் கருப்பு நிற பேக், குடை உள்ளிட்டவற்றையும் வெளியே வைத்து விட்டு செல்லும்படி கூறினர். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மாணவி ஒருவரிடம் கேட்டபோது, ‛‛செக்கிங்கின்போது பிளாக் ஷால் அனுமதியில்லை என்று கூறினார். பிளாக் ஷால் அணிந்தவர்களிடம் அதனை வாங்கிவிட்டு உள்ளே அனுமதித்தனர்'' என்றனர்.
இன்னொரு மாணவியிடம் கேட்டதற்கு, ‛‛நாங்கள் பிளாக் ஷால் அணிந்து வந்ததால் அதனை வெளியே வைத்துவிட்டு உள்ளே செல்லும்படி கூறினர். நாங்கள் பிளாக் ஷாலை வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்றோம்'' என்றார். இந்த சம்பவம் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியின் முடிவில் மாணவ-மாணவிகளின் ஷால், குடை உள்பட அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கருப்பு நிற பொருட்கள் அனைத்தும் மீண்டும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications