PMK for Whom?: ராமதாஸ் Vsஅன்புமணி! தேர்தல் ஆணையம் சொன்னதை கேட்டீர்களா? ஜி.கே.மணி ஹேப்பி
சென்னை: அன்புமணிதான் பாமக தலைவர் என கூறிக் கொண்டு போலியான ஆவணங்கள் கொடுத்தது செல்லாது, இனி அவர் தலைவரும் இல்லை, மாம்பழமும் அவர்களுக்கு கிடைக்காது என டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்பு கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "அன்புமணி தலைவர் என கூறிக் கொண்டு போலியான ஆவணங்கள் கொடுத்தது செல்லாது. அது ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இது ராமாதாஸுக்கும், பாமகவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
அன்புமணி தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக் கொண்டு போலி ஆவணங்கள் கொடுத்து 2026ம் ஆண்டு வரை பதவியில் இருப்பேன் என கூறி வருகிறார். நீதிமன்ற உத்தரவின் மூலம் பாமகவுக்கு, தான் தலைவர் என அன்புமணி கூற முடியாது. மாம்பழ சின்னமும் அவர்களுக்கு கிடையாது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக் கூடாது" என தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞரணி தலைவரை நியமிப்பதில் இருந்து தகராறு ஏற்பட்டது. இது அப்படியே வளர்ந்து ராமதாஸ், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கும் அளவுக்கு போய்விட்டது.
இந்த நிலையில் பாமக தனக்குத்தான் சொந்தம் என கூறி அன்புமணி, தேர்தல் ஆணையத்தை அணுகினார். அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை வைத்து அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
அத்துடன் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்வார். பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்குத்தான் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி மினி புஷ்கர்னா நேற்று விசாரித்தார்.
அப்போது ராமதாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பல்வீர் சிங் ஆஜராகி, "அங்கீகாரமற்ற அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தேவையில்லாமல் தலையிட்டுள்ளது. கட்சியின் முன்னாள் தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை உள்ளது என தெரிவித்துள்ளது.
ஆனால் அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதமே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு பொதுக் குழு நடத்தப்பட்டதாக போலியான ஆவணங்களை அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ராமதாஸ், தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதங்களை கண்டு கொள்ளவே இல்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு கடிதங்களை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
இதையடுத்து அன்புமணி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, "முறையாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை உள்ளது. பாமக நிறுவனருக்கு வயது மூப்பு ஏற்பட்டுள்ளதால் கட்சியை வழிநடத்த அடுத்த கட்டமாக மகன் பொறுப்பேற்றுள்ளார். எனவே ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதம் முன் வைக்கப்பட்டது.
அப்போது தேர்தல் ஆணையம் "எங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தான் அன்புமணியை தலைவர் என கூறினோம். கட்சிக்கு உரிமை கோரினால் ராமதாஸ் தரப்பு உரிய ஆவணங்களை கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்ததது.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இந்த வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது, சிவில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்" என கூறி ராமதாஸின் மனுவை முடித்து வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications