குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. இனி பார்ட் டைம் ரேஷன் கடைகள் வரப்போகுது! தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று சட்டப்பேரவையில் 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்றைய தினம் ரேஷன் கடைகள் குறித்து மீண்டும் சில முக்கிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.. இதில், முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.. அந்தவகையில்,2 தினங்களுக்கு முன்பு, உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர், ரேஷன் தொடர்பாக 2 விதமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழக உணவுத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிடுகிறார்கள்.. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 20ம் தேதி (நேற்று) உணவுத்துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்று ரேஷன் கடைகள் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்கள்.. அவர்கள் வந்து அறிக்கை தந்த பிறகு அதனை ஆய்வு செய்து அந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்று முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.
3000 ரேஷன் கடைகள்
இந்நிலையில், இன்று தமிழக சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, "கீழ் பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துணை கிராமங்களில் நியாய விலைக்கடைகள் இல்லாத காரணத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று, அங்குள்ள கடைகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு முன்வர வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "நியாய விலைக்கடைகளை தொடங்குவதற்கு, அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். திமுக ஆட்சியமைந்த பிறகு இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.. இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டியின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்" என்று பதிலளித்துர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகள்
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், "சேதுபாவாசத்திரம், கொளக்குடி ஊராட்சியில் முழுநேர நியாவிலைக்கடைக்கு கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன், தமிழகத்தில் உள்ள 34,902 ரேசன் கடைகளில், 6,218 ரேசன் கடைகள் தனியார் மற்றும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications