அம்மா, மகள் இருக்காங்க.. தண்டனை குறைத்து கொடுங்க.. நீதிபதியிடம் ஞானசேகரன் கதறியபடி கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன், எனக்கு அப்பா இல்லை.. அம்மா மட்டும்.. சகோதரியையும், 8வது படிக்கும் பெண் குழந்தையையும் பார்த்து கொள்ள வேண்டும் என்று கதறி அழுது குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தாயின் உடல்நிலை சரியில்லை என்று கூறிய அவர், அதிக கடன்கள் இருப்பதாகவும் கதறி இருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி இரவு, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டிவிட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

Gnanasekaran s Emotional Plea for Leniency in Anna University Sexual Assault Case

ஞானசேகரன் கைது

பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதன்பின் அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஏப்ரலில் சாட்சிகளிடம் விசாரணை

ஞானசேகரன் திமுக அனுதாபி என்பதால், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன்பின் பாலியல் வன்கொடுமை வழக்கை ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதன்பின் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர்.

29 சாட்சிகள்

பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் சாட்சி அளித்துள்ளனர். அதேபோல் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் மே 28ஆம் (இன்று) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரின் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான 11 பிரிவுகளிலும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு

இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன் குற்றவாளி ஞானசேகரன் கதறி அழுதுள்ளார். இதன்பின் நீதிபதி அறையில் இருந்து வெளியில் ஞானசேகரன் அமர வைக்கப்பட்ட நிலையில், ஜூன் 2ல் தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கதறி அழுத ஞானசேகரன், நீதிபதியிடம் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கோரிக்கை வைத்து கதறி இருக்கிறார்.

ஞானசேகரன் கோரிக்கை

அதுமட்டுமல்லாமல் ஞானசேகரன், எனக்கு அம்மா மட்டுமே.. அப்பா இல்லை.. தொழில் பாதிக்கும்.. அதிக கடன்கள் இருக்கிறது.. தாயின் உடல்நிலையும் சரியில்லை.. சகோதரியையும் பார்த்து கொள்ள வேண்டும்.. 8வது படிக்கும் பெண் குழந்தை உள்ளது.. அதனால் குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று கதறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+