"50% கூட குறையும்.." தங்கம், வெள்ளி விலை.. மெகா இன்ப செய்தியை அள்ளி கொடுத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. தங்கத்திற்குப் போட்டியாகக் கடந்த சில வாரங்களாக வெள்ளியும் உயர்ந்து வருகிறது. இதனால் இரண்டையும் முதலீட்டாளர்கள் ஆர்வமாக வாங்கி வருகிறார்கள். இதற்கிடையே தங்கம், வெள்ளி இரண்டின் விலையும் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதற்கு டிரம்ப், பொருளாதாரச் சூழல், புவிசார் அரசியல் எனப் பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வந்தது. தங்கத்தை மிஞ்சும் வகையில் கடந்த சில வாரங்களாக வெள்ளி விலையும் எங்கோ உச்சத்திற்குப் போய்விட்டது.

ஆனந்த் சீனிவாசன்
அதேநேரம் கடந்த சில நாட்களாக நிலைமை மெல்ல மாறுவது போலத் தெரிகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மெல்லக் குறைந்து வருகிறது. இதற்கிடையே தங்கம், வெள்ளி இரண்டில் எது அதிகம் குறையும். எந்தளவுக்குக் குறையும்.. குறிப்பாக வெள்ளி விலை அடுத்து என்னவாகும் என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "நாட்டில் தங்கம் வெள்ளி விலையை நிர்ணயம் செய்யும் மும்பை ஜவேரி பஜாரிலேயே வெள்ளி ஆர்டர் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது வெள்ளியை வாங்க யாருக்கும் வழியே இல்லை. எல்லாரும் 200 கிலோ, 300 கிலோ கூட வெள்ளியை வாங்குகிறார்கள். அவ்வளவு வெள்ளி வாங்கி என்ன செய்வீர்கள் எனக் கேட்டால்.. தெரியாது வீட்டில் வைத்துக் கொள்வேன் என்கிறார்கள்.
50% கூட குறையலாம்
இப்படி இப்போது பலரும் தாறுமாறாக வெள்ளி வாங்குகிறார்கள். இதில் பலரும் அடிப்பட வேண்டும். அடிபட்ட பிறகே பாடம் கற்றுக் கொள்வார்கள். நிச்சயம் பலருக்கும் வலிக்கும். இப்போது வெள்ளி ஒரு சில சதவிகிதம் மட்டுமே விழுந்துள்ளது. இதுபோல 50% கூட விழும்.
தங்கம் விலை இப்போது சில நாட்களாகக் குறைந்து வருகிறது. அதேநேரம் பெரியளவில் குறையுமா என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பெரிய சரிவு இருக்காது. தங்கம் விலை இனி ரூ.10,000க்கு கீழே போகுமா என்றால் சந்தேகம் என்றே சொல்ல வேண்டும். அப்படியே ரூ.10,000க்கு கீழ் போனாலும் தங்கம் விலை 9,000 ரூபாய்க்கு கீழ் போகவே போகாது" என்றார்.
வெள்ளியில் உள்ள சிக்கல்
அவர் மற்றொரு வீடியோவில், "இப்போது வெள்ளி விலை குறைந்தது எல்லாம் ஒரே சரிவே இல்லை. வரலாற்றில் அது 90% கூட குறைந்துள்ளது. இந்தியாவிலேயே கடந்த 7 ஆண்டுகளில் 3 முதல் 4 வருடம் வரை வெள்ளி நஷ்டத்தையே கொடுத்துள்ளது. வெள்ளி என்பது தொழிற்சாலைக்குப் பயன்படும் பொருள். அதன் விலை ஏறும் குறையும்! கரன்சியாக கருதப்படும் ஒன்றுக்கும் தொழிற்சாலைக்குப் பயன்படும் பொருளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நாம் நினைப்பதால் எல்லாமே கரன்சி மெடலாக மாறிவிடாது. மத்திய வங்கி தான் அதை முடிவு செய்யும். தங்கம் மட்டுமே கரன்சியாக கருதப்படும் மெடல். பிளாட்டினத்தை கூட கரன்சியாக கருத மாட்டார்கள். மேலும், வெள்ளிக்கு எதிராக உங்களால் எங்கும் கடன் வாங்க முடியாது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
விலை குறைந்துள்ளது
வரலாற்றில் பல முறை வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை 40, 50% உயர்ந்தால்.. அது 25% வரை குறையும். வெள்ளி விலை எப்போதும் அதிகமாகவே இருக்கும் எனச் சொல்ல முடியாது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் வெள்ளி ஜீரோவில் இருந்து 40க்கு போனால் அங்கிருந்து 20க்கு வரும். எனவே, நீங்கள் ஜீரோவில் இருந்து 20க்குள் வாங்கி இருந்தால் பிரச்சினை இல்லை. 20க்கு மேல் வாங்கினால் தான் மாட்டிக் கொள்வீர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications