தங்க நகை அடகு .. பொதுத்துறை வங்கிகளில் அப்ரைசர்கள் சம்பாத்தியம் எப்படி இருக்கும் ?
சென்னை: ஒரு நாள் முழுக்க பொதுத்துறை வங்கி ஏதாவது ஒன்றில் தங்க நகை அடவைக்க உட்கார்ந்து இருக்கிறீர்களா? நிச்சயம் அந்த கஷ்டம் பலருக்கும் நடந்திருக்கும்.. தங்களது அடகு வைக்கும் இடத்திற்கு செல்ல டோக்கன் வாங்க வேண்டும் அதன் பிறகு தங்க நகை அடகு வைக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் கிட்டத்தட்ட பணம் கிரெடிட் ஆகி வங்கியை விட்டு வெளியே வர மாலை நான்கு மணி வரை கூட ஆகிறது. தங்க நகை அடகு வைக்கும் போது நகை மதிப்பீட்டாளர் என்பவர் வங்கி பணியாளராக இருக்க மாட்டார்.
பெரும்பாலும் ஒப்பந்த பணியாளராகவே இருப்பார். அவருக்கு ஆயிரம் ரூபாய் அடைத்து நான்கு ரூபாய் என்ற விகிதத்தில் அதிகபட்சம் 300 ரூபாய் ஒரு நகைக்கடனுக்கு வழங்க வேண்டி இருக்கிறது ஒரு நாளில் தங்க நகை மதிப்பீட்டாளர் எவ்வளவு சம்பாதிப்பார் என்பது உங்களுக்கு தெரியுமா.. வட்டி விகிதம் என்ன.. அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

பொதுத்துறை வங்கிகளில் தங்க நகை அடகு வைப்பது ஏழை மக்களின் மிகப்பெரிய விருப்பமாக உள்ளது. ஆனால் பொதுத்துறை வங்கிகளில் ஒரு நாள் முழுக்க காத்திருக்கும் நிலை இருக்கிறது. வட்டி விகிதம் குறைவு நகைக்கு அதிக பணம் போன்ற காரணங்களால் இந்தியன் வங்கி கனரா வங்கி பாரத் ஸ்டேட் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பொதுத் தேர்வுகளில் அதிகம் பேர் நகைகளை அடகு வைக்க ஆர்வம் காட்டுகிறார்கள் .
பொதுவாக 8.5% முதல் 9 சதவீதம் வரை பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் இருக்கிறது. இதில் அக்ரி லோன் மற்றும் வணிக கடன் சிறு வணிக கடன் என்று அழைப்பார்கள்.. இதற்கு வட்டி விகிதம் மிகக் குறைவு .. இந்த கடனில் தான் ஏழை எளிய மக்களுக்கு பொதுத் துறை வங்கிகளில் அடகு வைத்து பணம் தருகிறார்கள்.. விவசாயக் கடனில் மூன்று லட்சம் வரை அடகு வைக்க முடிகிறது.. நகை மதிப்பும் மிக அதிகமாக இருக்கும்.
கிராமுக்கு 9000 ரூபாய்
ஒரு கிராமுக்கு 9000 க்கு மேல் தருகிறார்கள். இதனால் ஏழை மக்கள் பெரும்பாலும் நகையை அடை வைக்க பொதுத்துறை வங்கிகளையே நாடுகிறார்கள். அதே நேரம் பொதுத்துறை வங்கிகளின் நகை அடகு வைக்க ஒரு பவுன் என்ற அளவு கண்டிப்பாக பின்பற்றப்படுகிறது. எனினும் சில நல்ல நகை மதிப்பீட்டாளர்கள் ஒரு பவுனுக்கு குறைவான நகையை கொண்டு சென்றாலும் அடகு வைத்து பணம் தருகிறார்கள்.
இந்த நகை மதிப்பீட்டாளர் பணி என்பது மிகவும் சவாலான பணி. ஒரு நாளில் அவர்களுக்கு 15 முதல் 20 கடன்கள் தான் போட முடியும் . எனவே பொதுத்துறை வங்கிகளில் அதற்கு மேல் நகை அடகு வைப்பதற்கு வாய்ப்பில்லை . ஏனெனில் இதற்கே நான்கு மணிக்கு மேல் ஆகிவிடும்.
சம்பளம்
நகை மதிப்பீட்டாளர்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 15 நகை கடன் என்றால், அவர்களுடைய ஒரு நாள் வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. துறை மகன் 3000 முதல் 4000 வரை அவர்களுக்கு கமிஷனாக கிடைக்கும்.. வார விடுமுறை போக ஒரு மாதத்தில் அவர்களுக்கு தோராயமாக 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தாராளமாக கிடைக்கும்.. அதே நேரத்தில் அவர்களை பணி அசாத்தியமானது . ஏனெனில் நகை அட வைக்கும் மரம் வளரும் பொறுமை இழந்து நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் அவதி உடனே இருப்பார்கள்..
அவர்களை பொறுமையாக பக்குவமாக பேசி அடகு வைக்க வேண்டும்.. அதேபோல் நகை அடங்கில் பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கும் அதையும் அவர்கள் தான் தீர்க்க வேண்டும்.. மேலும் நகை அடகு வைத்து அதை திருப்ப வருடம் தினமும் வருவார்கள் அவர்களுக்கும் நகையை திருப்பி தர வேண்டிய பொறுப்பும் நகை மதிப்பீடியாளருக்கு தான் உண்டு.. கோழி நகைகளை அடகு வைத்து படம் பெற வருபவர்களும் சில நேரங்களில் உண்டு..
நகை மதிப்பீட்டாளர்
அதையும் கவனமாக கையாள வேண்டும்.. என்னதான் வங்கிகள் ஆடிட்டிங் சோதனை என்று பல்வேறு தர அம்சங்களை வைத்திருந்தாலும் நகை மதிப்பீட்டாளர் செய்யும் சிறு தவறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதைய நிலையில் பொதுத்துறை வங்கிகளின் நகை மதிப்பீட்டாளர் பணி என்பது பெரும் சவால் ஆனதாகவே இருக்கிறது..
ஆதார் மையம் போல் சவாலானது
ஏனெனில் அண்மை காலங்களில் தங்க நகையின் மதிப்பு உயர்ந்ததால் தங்க நகை அடகு வைக்க வரும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.. இது கிட்டத்தட்ட ஆதார் மையத்தில் சென்று ஆதார் கார்டு எடுப்பதற்கு சமமானது.. தங்க நகை அடகு வைக்கும் போது தாங்கள் சந்தித்து அனுபவம் எதும் இருந்தால் கருத்துக்களை பகிருங்கள்.












Click it and Unblock the Notifications