இப்படியே போனால் தீபாவளிக்கு தங்கம் விலை ரூ 60 ஆயிரம் கன்ஃபார்ம்! இந்த வெள்ளிக்கு வந்த வாழ்வை பாருங்க
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ 7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தினம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 57 ஆயிரத்தை நெருங்குகிறது.
சென்னையில் செப்டம்பர் 27ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ 7100க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 56,800க்கு விற்கப்படுகிறது. கிட்டதட்ட 57 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் 60 ஆயிரத்தை தொட்டுவிடும். தங்கம்தான் இப்படி என பார்த்தால் இந்த வெள்ளியின் விலையும் உயர்ந்துவிட்டது, ஒரு கிராம் ரூ 102 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் தங்கம் விலை கூடுவதும் குறைவதுமாக இருந்தது.
செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வதேச சந்தைகளுக்கு விடுமுறையாகும். எனவே தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செப்டம்பர் 2 ஆம் தேதி ரூ 200 குறைந்து சவரன் விலை ரூ 53360 க்கு விற்கப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 25 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6670க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 91-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 91 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் அதே விலையில் நீடித்தது.
செப்டம்பர் 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 53,760 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராம் ரூ 6,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு தங்கத்தின் விலையில் குறைந்த அளவில் உயர்வதும் குறைவதுமாக இருந்தது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை செப்டம்பர் 12 ஆம் தேதி சவரனுக்கு ரூ 960 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ 6825 க்கும் ஒரு சவரன் ரூ 54,600 க்கும் விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலையும் ரூ 3.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 95 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 95,000க்கும் விற்பனையானது.
சென்னையில் செப்டம்பர் 14- ஆம் தேதி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ 6865-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் விலை ரூ 54,920 க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 97 க்கும் ஒரு கிலோ ரூ 97 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. இரு தினங்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 1280 உயர்ந்துள்ளது.
சென்னையில் செப்டம்பர் 20-ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ 480 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் விலை ரூ 55,080க்கு விற்பனையானது. கிராம் ஒன்று ரூ 6,885-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 1.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 97.50 க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் செப்டம்பர் 23 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 6980-க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 55,840-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று ரூ 98-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ 98 ஆயிரம் ஆகும்.
சென்னையில் செப்டம்பர் 24 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்தது. கிராமுக்கு ரூ 20 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ 7000 க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 56 ஆயிரத்தை தொட்டது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ 98 க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications