தங்கம் விலை 4ஆவது நாளாக தொடர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?.. நகைக் கடையில் கூட்டம்!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் 4ஆவது நாளாக குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகைக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைத்தது. இதனால் அன்றைய தினமே தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் 4ஆவது நாளாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 120 குறைந்து சவரன் ரூ 51,320 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து ரூ 6415 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் கிராம் ரூ 89 க்கு விற்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்று வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 3,160 குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகைக் கடைகளில் தங்கம் வாங்க கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஜூலை 17 ஆம் தேதி சவரன் விலை ரூ 55,360 க்கு விற்பனையானது. அதன் பிறகு ஜூலை 22 ஆம் தேதி சவரன் ரூ 54,600 க்கு விற்பனையானது.
கடந்த செவ்வாய்க்கிழமை பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதாவது சுங்க வரி குறைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 24ஆம் தேதி கிராமுக்கு ரூ 275 குறைந்து ஒரு கிராம் ரூ 6,550 க்கு சவரனுக்கு ரூ 2200 குறைந்து சவரன் விலை ரூ 52,400க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நேற்று 3ஆவது நாளாக கிராமுக்கு ரூ 60 குறைந்து ஒரு கிராம் ரூ 6,430 க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ 480 குறைந்து ஒரு சவரன் விலை ரூ 51440 க்கு விற்பனையானது. தங்கம் விலை குறைந்ததை அடுத்து வெள்ளி விலையும் ரூ 3 குறைந்து கடந்த 4 தினங்களாக கிராம் ரூ 89 க்கு விற்பனையாகி வருகிறது.
தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் வரும் நாட்களிலும் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. பொதுவாக ஆடி மாதம் எந்த திருமணங்கள் பெரும்பாலும் இல்லாததால் நகையின் விலை குறைந்து வரும். தற்போது இறக்குமதி வரியும் குறைந்துள்ளதால் நாளை தங்கம் சவரன் ரூ 50 ஆயிரத்திற்கு கீழ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications