சர்ர்ருன்னு ஏறிய தங்கம் விலை.. ஆடி முதல் நாளில் புதிய உச்சம்! சென்னையில் சவரன் 55 ஆயிரத்தை கடந்தது!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து இன்று ரூ.55,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.6,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்களில் பலருக்கும் தங்க நகைகளை வாங்குவதில் ஆர்வம் எப்போதும் இருக்கிறது. குறிப்பாக தங்க நகை அணிவதில் பெண்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. பலரும் தங்கத்தை சொத்து போல சேர்த்து வைப்பதும் உண்டு. பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரின் ஒரே சேமிப்பு வழி தங்கமாகவே இருக்கும்.
பலராலும் விரும்பப்படும் தங்க நகையின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை ரூ. 55 ஆயிரத்தை கடந்துள்ளதால் நகை பிரியர்கள், பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஜூலை 8 ஆம் தேதியில் இருந்து சவரன் ரூ.54 ஆயிரம் என்ற ரேஞ்சில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.55 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால், வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் உயரக்கூடுமோ என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.74 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,669 க்கும், 18 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45352க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.100.50-க்கு விற்பனை ஆகிறது. பார் வெள்ளி ரூ. 1,00,500-க்கும் விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications