தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு கிடுகிடுவென உயர்ந்தால்... கதிகலங்க வைக்கும் 'விலை நிலவரம்'
சென்னை: தங்கத்தின் விலை அண்மையில் சரசரவென குறைந்து வந்ததால் மகிழ்ச்சியில் இருந்தனர் பொதுமக்கள். ஆனால் தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் நடைபெற்றும் வரும் நிலையில் கிடுகிடுக்க வைக்கிறது தங்கத்தின் விலை.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இன்று காலையில் சென்னையில் தங்ககத்தின் விலை சற்று குறைந்திருந்தது.

இன்று காலை சென்னையில் தங்கம் விலை நிலவரம்:
1 கிராம் தங்கம் ரூ 5,410
22 கேரட் ஆபரண தங்கம்- ரூ43,280
வெள்ளி:
1 கிராம் ரூ75.50
1 கிலோ வெள்ளி கட்டி ரூ75,500
இன்று மாலை சென்னையில் தங்கம் விலை நிலவரம்:
1 கிராம் தங்கம் ரூ 5,510 ( இன்று காலை நிலவரத்தைவிட ரூ100 அதிகம்)
22 கேரட் ஆபரண தங்கம்- ரூ44,080 (இன்று காலை நிலவரத்தை விட ரூ800 அதிகம்)
இன்று மாலை வெள்ளி நிலவரம்
1 கிராம் ரூ77
1 கிலோ வெள்ளி கட்டி ரூ77,000.
இறங்கு முகம் டூ ஏறுமுகம்: இது தொடர்பாக தங்கம், நகை வர்த்தகர்களிடம் பேசிய போது, கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அதாவது இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் தொடங்கும் முன்பாக தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவது அல்லது தங்கத்தின் மீது முதலீடு செய்வது என்பது அதிகரித்திருந்தது. ஆனால் இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் தொடங்கிய நிலையில் இந்த நிலைமை மாறத் தொடங்கியது.
கிடுகிடு உயர்வு: தங்கம், வெள்ளி விலை ஏறுமுகத்தை நோக்கி பயணித்தது. உதாரணமாக கடந்த11-ந் தேதி 1 கிராம் தங்கம் ரூ5372 க்கு விற்பனையானது; அக்டோபர் 12-ந் தேதி 1 கிராம் தங்கம் ரூ5430 ஆக இருந்தது. இன்று காலை 1 கிராம் தங்கம் ரூ5410 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதாவது 3 நாட்களில் 1 கிராம் தங்கம் விலை ரூ138 என உயர்ந்தது. இப்போது இன்று மாலை ஒரே நாளில் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ100 என உயர்ந்துவிட்டது. 22 கேரட் தங்கம் இன்று காலை நிலவரத்தை விட மாலையில் ரூ800 அதிகம் என்பது பொதுமக்களுக்கு சற்று சிரமம்தான். இது தங்கம், வெள்ளி வர்த்தகத்தில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்கின்றனர்.
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications