நல்ல சம்பளம் + அரசு வேலை.. 93 பணியிடங்களுக்கு தேர்தல் துறை ஒப்புதல்: தமிழக தேர்தல் அதிகாரி சர்ப்ரைஸ்
சென்னை: மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரிவுகளில் 93 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு தேர்தலின்போது அதுதொடா்பான பணிகளை மேற்கொள்ள வழக்கமான ஊழியா்களுடன் கூடுதல் பணியாளா்கள் தேவைப்படும்.

கூடுதல் பணிகள்: அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலுக்கும் அரசின் தோதல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியா்கள் தேவைப்படுகிறாா்கள். தேர்தலின்போது பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வாக்குச் சாவடி அமைவிடங்களை உருவாக்குவது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை இறுதி செய்வது, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு பயிற்சிகளை அளிப்பது, மாவட்டந்தோறும் வாகனங்களின் எண்ணிக்கையை முடிவு செய்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னை உருவாகும் வாக்குச் சாவடி மையங்களை அடையாளம் காண்பது, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது, தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்வது போன்ற பல்வேறு வகையான பணிகள் தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும்.
ஜூன் 30: தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில் இந்தப் பணிகளுக்கான அழுத்தம் மேலும் அதிகரிக்கப்படும். வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்குகளை எண்ணுவது போன்ற தருணங்களிலும் தேர்தல் அலுவலா்களுக்கு பணிச்சுமை அதிகரித்தே காணப்படும். இதைக் கருத்தில்கொண்டு, மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலுக்கென மாவட்ட வருவாய் அலுவலா், தட்டச்சா், அலுவலக உதவியாளா், வட்டாட்சியா், துணை வட்டாட்சியா், உதவியாளா், இளநிலை உதவியாளா், துணை ஆட்சியா் நிலையிலான அதிகாரி என 93 புதிய பணியிடங்களை ஏற்படுத்த தமிழக தேர்தல் துறை சாா்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நியமனம்: அவற்றில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், பதிவுரு எழுத்தா், அலுவலக உதவியாளா் ஆகிய பணியாளா்களை அரசின் வழக்கமான ஊதிய நிலையுடன் நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்க முடியாதபட்சத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமித்துக் கொள்ளலாம்" என தெரிவித்திருக்கிறார்.
இறுதி பட்டியல் : இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து வாக்காளர் அட்டை தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள், அந்தந்த மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications