"குட் பேட் அக்லி" எப்படி இருக்கு? அஜித் குமார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் - விமர்சனம்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே நடிகர் அஜித் குமார் நடிப்பில் ‛குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ள நிலையில் அஜித் குமார் ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திரைக்கு வருவதற்கு முன்பே படம் எப்படி உள்ளது? என்பது பற்றி ‛குட் பேட் அக்லி' விமர்சனம்(Good Bad Ugly Review) வெளியாகி உள்ளது. அதில் பாசிட்டிவ்வாகவும், அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து அஜித் குமார் ரசிகர்கள் காத்துள்ளனர். நிச்சயம் இந்த திரைப்படர் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவுகள் தமிழகம் முழுவதும் விற்பனையாகிவிட்டது. படத்தை வரவேற்க அஜித் குமாரின் கட்அவுட்டுகள் திரையரங்குகளை சுற்றி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை இன்று மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களில் காலை 9 மணிக்கு சில ஸ்கீர்ன்களிலும் அதன் பிறகு 30 நிமிட இடைவெளிக்கு பிறகு மற்ற திரையரங்குகளிலும் திரைப்படம் வெளியாக உள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான் குட் பேட் அக்லி திரைப்படம் முதலில் திரைக்கு வருகிறது. அதன்படி அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு வடஇந்தியாவில் காலை 7.30 மணிக்கும், கர்நாடகாவில் 8.30 மணிக்கும் படம் திரைக்கு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 9 மணிக்கு திரைப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் தான் ‛குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பாசிட்டிவான ரிவ்யூ கிடைத்துள்ளது. அதோடு இந்த திரைப்படம் அஜித் குமாரின் ‛ஒன் மேன் ஷோ' என்று புகழப்பட்டுள்ளது. இதனால் அஜித் குமார் ரசிகர்கள் படத்தை கொண்டாட தொடங்கி உள்ளனர். இந்த ரிவ்யூவை தந்துள்ளவரின் பெயர் உமைர் சந்து. வெளிநாட்டு தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக இருப்பதாக கூறும் அவர் திரைப்படத்தை ரிலீசுக்கு முன்பே பார்த்துவிட்டார்.
இதையடுத்து தான் அவர் ‛குட் பேட் அக்லி' என்று அஜித்குமாரின் ஒன் மேன் ஷோவாக இருக்கும். இது நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஃபர்ஸ்ட் ரிவ்யூ குட் பேட் அக்லி: திரைப்படம் ஸ்டார் பவராக உள்ளது. ஸ்டைல், சண்டை, உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் ஆச்சரியமளிக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அஜித் குமார் மீண்டும் பழிவாங்கும் அவதாரத்தில் நடித்துள்ளார். விறுவிறுப்பான திரைக்கதை, குறிப்பாக கிளைமேக்ஸ் என்பது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இருக்கும்'' என்று கூறியுள்ளார். அதேடு குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு அவர் 4 ஸ்டார்களை வழங்கி உள்ளார்.
மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‛‛ அஜித் குமாருக்கு ஹேட்ஸ்ஆஃப். நீங்கள் எப்போதும் தடைகளை உடைத்து கிளாசியான திரில்லர் படத்தை கொடுக்கிறீர்கள். என்ன மாதிரியான கிரேஸி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் இது. அனைவரும் வெறிப்பிடித்தது போல் நடித்துள்ளனர். அஜித்குமார் ஒன்மேன் ஷோவாக இருக்கிறார். கிளைமேக்ஸ் மற்றும் இண்டர்வெல் பிளாக்ஸ் சூப்பராக உள்ளது. பிஜிஎம் அருமையாக இருக்கிறது. கதை மற்றும் திரைக்கதை என்பது சுவாரசியமானதாக இருப்பதோடு நகைச்சுவையோடும் உள்ளது. படத்தின் வசனங்கள் கைத்தட்டுகளை குவிக்கும் வகையில் உள்ளது. ரசிகர்கள் அஜித் குமாரின் புதிய அவதாரத்தை ரசிப்பார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அஜித் குமார் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
குட் பேட் அக்லி திரைப்படம் என்பது அஜித்குமாரின் 63வது திரைப்படமாகும். இந்த திரைப்படம் முதலில் ஏகே 63என்று அழைக்கப்பட்டது. 2024 மார்ச் மாதம் தான் குட் பேட் அக்லி என்று பெயர் சூட்டப்பட்டது. திரைப்படம் முழுக்க முழுக்க ஹைதராபாத் மற்றும் ஸ்பெயினில் படமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் திரைப்படத்தின் சூட்டிங் முழுவதுமாக முடிவடைந்தது. அதன்பிறகு போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் நடந்து வந்தன.
இந்த படத்தின் கேமராமேனாகஅபிநந்தன் ராமானுஜம் பணியாற்றி உள்ளார். எடிட்டிங் பணியை விஜய் வேலுகுட்டி செய்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு முன்பாக நடிகர் அஜித் குமார் - திரிஷா ஆகியோர் இணைந்து விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து இருந்தனர். அந்த திரைப்படம் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது. இப்படியான சூழலில் மீண்டும் அஜித் குமார் - திரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அக்லி குறித்த ரிவ்யூ பாசிட்டிவாக இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதோடு, முதல் நாள் முதல் ஷோவை கொண்டாட உற்சாகமாக தயாராகி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications