41 பேருக்கு குறி.. "ரிஸ்க் வேண்டாம்".. அதிமுக ஆடும் "தரமான" ஃசேப் கேம்.. இபிஎஸ் செம ராஜதந்திரிதான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 177 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டு இருந்த நிலையில்.. முதல்வர் பழனிசாமி மிகவும் ராஜதந்திரத்தோடு செயல்பட்டு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிகின்றன. பல முக்கிய விஷயங்களை மனத்தில் வைத்து அதிமுக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அதிமுக கிட்டத்தட்ட முழுமையாக தயாராகிவிட்டது. இதுவரை 177 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து அதிமுக தேர்தல் பிரசாரம் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.
நேற்று வேட்பாளர் அறிவிப்போடு சேர்த்து பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. அதோடு பாமக கட்சியும் இதுவரை 19 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

எப்படி
இதுவரை 177 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பாஸ்கரன், வளர்மதி, நிலோபர் கபீல் ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது அமைச்சர்க்களாக இருக்கும் 30 பேருக்கு மீண்டும் தேர்தலில் அதிமுக வாய்ப்பு கொடுத்து உள்ளது.

வாய்ப்பு
அதிமுக எம்எல்ஏக்களில் 41 பேருக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்ற எம்எல்ஏக்கள் எல்லோரும் மீண்டும் தேர்தலில் வாய்ப்பு பெற்று உள்ளனர். அதிமுகவில் ஜெயலலிதா இருந்த வரை இப்படி நடந்தது இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது பொதுவாக ரொட்டேஷன் பாலிசி போல புதிய புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

சீனியர்கள்
சில சீனியர்களை மட்டும் வைத்துக்கொண்டு பல புதிய நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் இந்த முறை எடப்பாடி பழனிச்சாமி தற்போது இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார். இதற்கு பின் ராஜதந்திரமான முடிவு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தந்திரம்
அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது... அமைச்சர்கள், எம்ஏல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து இருக்காங்க.. இவங்களுக்குதான் தொகுதி நிலவரம் தெரியும். அதனாலதான் வாய்ப்பு கொடுத்து இருக்காங்க. அதே மாதிரி இந்த தேர்தல்ல திமுக நிறைய செலவு பண்ணுது. புதிய முகத்தை இறக்கினா செலவு பண்ண மாட்டாங்க . அதனால்தான் தற்போது இருக்கும் அமைச்சர்களை இறக்கி இருக்கோம், என்று கூறுகிறார்கள்.

காரணம்
அதோடு தற்போது இருக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை இறங்குவதே பாதுகாப்பானது. இவர்கள் தொகுதியில் பிரபலமாக இருப்பார்கள். மக்களுக்கு இவர்களை தெரியும். இதனால் பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும்.இவர்களை விட்டுவிட்டு புதிய முகங்களை இறக்கினால் அவர்களை பிரபலப்படுத்துவதற்கு முன்பே தேர்தல் முடிந்துவிடும்.

தேர்தல் முடியும்
முக்கியமாக தற்போது இருக்கும் அமைச்சர்கள் , எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கொடுப்பதால் கட்சிக்குள் கோஷ்டி மோதல் குறையும் என்று யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளனராம். புதிய ஆட்களை இறக்கினால் மூத்த தலைவர்கள் அதிருப்தி ஆக வாய்ப்புள்ளது. அதை அதிமுக தற்போது தடுத்து இருக்கிறது. இதுதான் இப்போதைய நிலைமைக்கு சரியான முடிவு என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

41 பேர்
41 எம்எல்ஏக்களுக்கு மட்டுமே அதிமுகவில் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர்கள் குறித்து உளவுத்துறை சரியான ரிப்போர்ட் கொடுக்கவில்லை. இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்ததால் அந்த இடங்களை கூட்டணிக்கு ஒதுக்கவும், புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் அதிமுக முடிவு செய்துள்ளது... அதிமுக சிறப்பாக திட்டமிட்டே காய்களை நகரத்தி உள்ளது என்கிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications