டோட்டலாக மாறும் கிண்டி.. ரயில் நிலையத்தில் மல்டி லெவல் பார்க்கிங்.. "ஷாப்பிங் மால்" போல வருது!
சென்னை: சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் பன்னடுக்கு கார் பார்க்கிங் கட்ட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த பன்னடுக்கு வாகன பார்க்கிங் வளாகத்தில் தரைத்தளத்தில் உணவு விற்பனை நிலையங்கள், கேமிங் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், குழந்தைகள் விளையாட்டு பகுதி, சில்லறை விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடி என ஒரு ஷாப்பிங் மால் போன்று அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ளது.
சென்னை தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் எழும்பூருக்கு அடுத்த படியாக மிக முக்கிய ரயில் நிலையமாக இருப்பது கிண்டி ரயில் நிலையம் தான். கிண்டி ரயில் நிலையத்தினை தினந்தோறும் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ஐடி நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கிண்டி ரயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.

காலை மற்றும் மாலை என பீக் நேரங்களில் ரயில் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டம் அலை மோதும். கிண்டிக்கு வரும் ரயில்களிலும் புறப்படும் ரயில்களில் ஏறுவதற்காகவும் இறங்குவதற்காகவும் நூற்றுக்கணக்கான பயணிகள் காத்து நிற்பதைக் காண முடியும். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் முதல் முறையாக பார்த்தால், ஏதோ திருவிழா கூட்டம் போல இருக்கிறதே என நினைக்கும் அளவிற்கு கிண்டி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருக்கும்.
தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் இந்த ரயில் நிலையம் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. கிண்டி ரயில் நிலையம் அருகிலேயே மெட்ரோ ரயில் நிலையமும் உள்ளது. அதுபோக அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, தொழிற்பேட்டை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம், காந்தி மண்டபம் உள்ளிட்டவைகள் இருப்பதால் இந்த இடங்களுக்கு செல்லும் பயணிகள் கிண்டி ரயில் நிலையத்தையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
கிண்டி ரயில் நிலையத்தை பொறுத்தவரை தற்போது கார்களை நிறுத்த பார்க்கிங் வசதி போதுமானதாக இல்லை. இதனால், ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி கோரப்பட இருக்கிறது. இந்த பன்னடுக்கு பார்க்கிங் வசதியை தனியாருடன் இணைந்து ரயில்வே பராமரிக்க உள்ளது.
இந்த வாகன நிறுத்தத்தில் கார்களை நிறுத்த 4 மணி நேரத்திற்கு ரூ.25 ம், மாதத்திற்கு ரூ.3,750-கட்டணமாக தெற்கு ரயில்வே நிர்ணயித்து இருக்கிறது. ரயில் பயணிகள் மட்டும் இன்றி யார் வேண்டுமானாலும் இந்த கட்டணத்தை செலுத்தி கார்களை நிறுத்திக் கொள்ளலாம். இந்த பன்னடுக்கு வாகன பார்க்கிங் வளாகத்தில் தரைதளத்தில் உணவு விற்பனை நிலையங்கள், கேமிங் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், குழந்தைகள் விளையாட்டு பகுதி, சில்லறை விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடி என பல்வேறு கடைகள் அமைக்கப்பட உள்ளன.
கிட்டத்தட்ட ஒரு ஷாப்பிங் மால் போலவே இது அமைக்கப்பட உள்ளது. இந்த பார்க்கிங் மையத்தில் கார்களை சர்வீஸ் செய்வதற்கான வசதியும் அமைக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் அமைக்கப்படும் முதல் மல்டி லெவல் பார்க்கிங் வசதி இதுவேயாகும். கிண்டி ரயில் நிலையத்தை போலவே பிற ரயில் நிலையங்களிலும் இதே போன்று பார்க்கிங் வசதியை அமைக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையின் மிக முக்கியமான இடமாக உள்ள கிண்டி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட இருக்கும் இந்த பன்னடுக்கு கார் பார்க்கிங் கட்டிடம், ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மெட்ரோ ரயில் நிலையமும் அருகிலேயே இருப்பதால் கார்களை பார்க்கிங் செய்வதில் இனி சிரமம் இருக்காது எனவும் கார்களின் பாதுகாப்பை பற்றியும் கவலைப்படாமல் பயணம் செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.
-
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications