தமிழ்நாட்டுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி "சனிக்கிழமைகளில்" நடக்கும் மாற்றம்.. தமிழக அரசின் செம அதிரடி
சென்னை: இனிமேல் வருகின்ற வாரம் முதல் சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார்.
விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க போகிறது.. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் வருவது வழக்கம். அந்தவகையில், இந்த வருடமும் டெங்கு பரவல் உள்ளது.

எனவே, இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி, தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
முகாம்கள்: அந்தவகையில், டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற டிசம்பர் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை அதாவது 10 வாரங்கள் வாரந்தோறும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் வீதம், 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தும் பணிகளும் கையில் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த முகாம்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனைக்கும் இடையே, பாத மருத்துவம் - நீரிழிவு நோய் அறுவை சிகிச்சை சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்: இந்த நிகழ்வுக்கு பிறகு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தினை தொடங்கியிருக்கிறார்..
அனைவரும் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வரும் மத்திய அரசிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், நீட் விலக்கு குறித்தான அவசியம் குறித்து எடுத்துரைத்து வருகிறார். தமிழகத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் இடத்திலும், நீட் விலக்கு குறித்து தமிழக முதல்வர் பேசியதுடன், அதற்குண்டான கடிதத்தினையும் தந்துள்ளார்.
மழைக்காலம்: மழைக்காலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒரே நாளில் 1000 இடங்களில் நடத்தப்படும் என்று அறிவித்து, 2000-க்கும் மேற்பட்ட முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் 29 ம் தேதியன்று மட்டும், தமிழகம் முழுவதும், 1,943 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.. இதன்மூலம் 1,04,876 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 335 பேருக்கு காய்ச்சல், 254 பேருக்கு இருமல் மற்றும் சளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல, நவம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால், மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்கள் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கையினை வைத்துள்ளனர்..
சனிக்கிழமை: எனவே, இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளரிடமும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரிடமும் ஆலோசிக்கப்பட்டு, இனிமேல் வருகின்ற வாரம் முதல் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.. ஆனால், மருத்துவத் துறை வரலாற்றிலேயே தொடர்ந்து 10 வாரங்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் அமைச்சர் சுப்ரமணியன்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications