கனமழை.. இன்று 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அதிக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று விடிய விடிய பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
தமிழகத்தில் நவம்பர் 30, டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. இதன் எதிரொலியாக நேற்றைய தினம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்
மேலும் இன்றும் சில மாவட்டங்களில் அதீத மழையும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்யும் என்பதால் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில்
இதையொட்டி சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு
அது போல் நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காக்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுக்காக்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 தாலுக்காக்கள்
புதுக்கோட்டையிலும் 2 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுக்காகளுக்குள்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் புதுவையிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications