Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்கள்.. பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் மாற்றுத்திறனாளிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனை வலியுறுத்தி சென்னையில் மாற்றுத்திறனாளிகள், இன்று உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.. இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்து, மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளது கவனம் பெற்றுவருகிறது.

அரசு பதவிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சென்னையில் இன்று மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தனர்.

disabled people

இதுகுறித்து, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ரூபன்முத்து சென்னையில் செய்தியாளர்களிடம் அறிவித்திருந்தார்.

அவர் பேசும்போது, "கடந்த 2023 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையாக கணக்கிட்டு, சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் பணி நியமனம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை 2023 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

அரசு பணியிடங்கள்: அதன்படி அனைத்து அரசு துறைகளிலும் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு, அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக அனைத்து பணியிடங்களையும் தேர்வு செய்து, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு மூலம் அப்பணியிடங்களை நிரப்புமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசிதழ் 2024 பிப்.27-ம் தேதி வெளியானது.

அந்த அரசிதழில், "4 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசாணை நடைமுறைப்படுத்தப்படும். இதையொட்டி அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு மூலம் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் கண்டறிந்து நிரப்பப்படும். அரசு கல்லூரிகளில் பயிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கட்டண விலக்கு, தேர்வு கட்டண விலக்கு, மடிக்கணினிகள் வழங்கப்படும். அரசு பதவிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

உண்ணாவிரதம்: ஆனால் இதுவரை இந்த கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். எனவே முதல்வர் ஸ்டாலின் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று அதாவது டிசம்பர் 3ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம். போராட்டத்துக்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் இடம் மாற்றப்படும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை வாரி வழங்கி, மாற்றுத்திறனாளிகளின் இதயங்களில் முதல்வர் ஸ்டாலின் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாராட்டு அறிக்கை: இன்று மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நல வாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "கலைஞரின் பொற்கால ஆட்சியில் ஊனம் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டியும், அவர்களுக்கான தனித்துறையைக் கண்டு, தனி நல வாரியம் அமைத்தும், அத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை வாரி வழங்கி மாற்றுத்திறனாளிகளின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

செயலாக்கம்: அவரது வழியில் திராவிட மாடல் ஆட்சியின் துறை அமைச்சரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மலர பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை அறிவித்து செயலாக்கம் செய்து வருகிறார்.

ஒருகால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்புச் சக்கர ஸ்கூட்டி, தன்னார்வ தொண்டும் மூலம் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் தங்கிப் பயிலும் மனவளர்ச்சி குன்றியோருக்கான மதிய உணவு திட்டம், கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 மற்றும் ரூ.1500 உயர்த்தி வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விபத்து இறப்பு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்குதல், கல்வி உதவித்தொகை 2 மடங்கு உயர்த்தி வழங்குதல் போன்ற திட்டங்களை தொடர்ந்து அறிவித்து செயலாக்கம் செய்து வருகிறார்.

பாராட்டுக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தில், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வணங்கி மகிழ்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+