சம்பளம் சர்னு ஏறுது.. அரசு ஊழியர்களுக்கு குஷி.. அதைவிடுங்க.. பணப்பலன் கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை
சென்னை: ஓய்வூதியர்கள் மிக முக்கிய வேண்டுகோள் விடுத்து, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். என்ன அது?
தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் (CPI-IW) ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படுகிறது.

அகவிலைப்படி: அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதாக, சமீபத்தில் அதாவது மகா சிவராத்திரி தினத்தன்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த 4 சதவீத அகவிலைப்படி, 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதன் விளைவாக, ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிலுவைத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதுபோல, வருகிற மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மத்திய அரசு ஊழியர்கள் அந்த மாதத்திற்கான உயர்த்தப்பட்ட சம்பளத்தை மார்ச் 30 அன்றே பெற இருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ஓய்வூதியர்கள்: அதுஒருபுறமிருந்தாலும், பழைய, 13வது ஊதிய ஒப்பந்தத்தின்படி, பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓய்வூதியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்... இதுகுறித்து, போக்குவரத்து துறை செயலருக்கு, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநில தலைவர் கதிரேசன் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் உள்ளதாவது:
"போக்குவரத்து கழகங்களில், 2016 செப்டம்பர் 1ம் தேதி முதல் 2017 ஆகஸ்ட் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, 13வது ஊதிய ஒப்பந்தப்படி உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என, போக்குவரத்து துறை செயலர் தரப்பில், கடந்த ஆண்டு மே 25ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசாணை: அரசாணை பிறப்பித்து, 10 மாதங்களாகியும் போக்குவரத்து கழக நிர்வாகங்கள் பணப்பலன்களை வழங்கவில்லை. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 12 வாரங்களில், 13வது ஊதிய ஒப்பந்தத்தின்படி கணக்கீடு செய்து பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இதையடுத்தும் வழங்க மறுத்ததால் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும், கடந்த மாதம் 21ம் தேதி பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு: எனவே, இதில் தலையீடு செய்து அனைத்து கோட்டங்களிலும் மேற்குறிப்பிட்ட காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு, 13வது ஒப்பந்தப்படி பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும்" என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications