அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தருவாரா ஸ்டாலின்? அக்டோபர் 3ம் தேதியும் விடுமுறை? கோட்டைக்கு போன கடிதம்
சென்னை: மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ஆரம்பமாகி உள்ளது.. அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் ஆயூத பூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதில், அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 3ம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
நவராத்திரி விழா தொடங்கிவிட்ட நிலையில், அதன் நிறைவாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது நம்முடைய நாட்டில் வழக்கமாக உள்ளது.. அந்த வகையில், அக்டோபர் மாதம் 1ம் தேதி வியாழன் அன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

விஜயதசமி, காந்தி ஜெயந்தி
அதேபோல அக்டோபர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜய தசமி (சரஸ்வதி பூஜை) மற்றும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி என்பதாலும் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது. அந்தவகையில், இதையடுத்து, நாளை 27ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்படுகிறது..
மற்றொருபுறம் மாணவர்களின் காலாண்டு விடுமுறையும் ஆரம்பமாகிவிட்டது. இதன்காரணமாக ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்..
வார விடுமுறை
ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறை, காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 22,735 பயணிகளும் நாளை 14,415 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை 11,908 பயணிகளும் திங்கட்கிழமை 8,070 பயணிகளும் மற்றும் செவ்வாய் அன்று 33,138 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது
அரசு ஊழியர்களுக்கு விடுமுறை
இந்நிலையில், தசரா பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்கு, அக்டோபர் 3ம்தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.. அதில், கூறியிருப்பதாவது:
"அக்டோபர் 1 ஆயுதபூஜை, 2ம்தேதி விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை புதன் மற்றும் வியாழக்கிழமை வருகிறது. ஆனால், 3ம் தேதி வெள்ளிக்கிழமை, அரசு வேலை நாளாக உள்ளது. அடுத்து 4ம்தேதி சனிக்கிழமை, 5ம் தேதி ஞாயிறு அரசு விடுமுறை நாட்களாக உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் சர்ப்ரைஸ்?
எனவே, 3ம் தேதி விடுமுறை நாளாக அரசு அறிவித்தால், ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும். தசரா பண்டிகையை, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.
பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வோர், விடுமுறையை நன்கு கொண்டாடிவிட்டு திங்கள் கிழமை பணிக்கு வருவர். ஒருநாள் விடுமுறை அளிக்காமல், 3ம் தேதி வேலைநாளாக இருந்தால், காலை பணிக்கு வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே, தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடும் வகையில், அக்., 3ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தன்னுடைய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications