டிரஸ்ஸிங் செய்ய வந்த அரசு ஊழியரின் அநாகரீகம்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்.. இப்ப கம்பி எண்ணுகிறார்
சென்னை: உதவிக்காக வீட்டிற்கு வரும் நபர்களிடம் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருந்த பெண்ணிடம் மருத்துவ உதவி செய்ய வந்துள்ளார் அரசு ஊழியர்... அப்போது அவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அந்த நபர் மீது உடனடியாக போலீஸ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், ஏழை எளிய மக்களுக்கு பெரும் பயனாக இருந்து வருகிறது.. கூலித் தொழிலாளிகள் முதல் மருத்துவ வசதி இல்லாதவர்கள் வரை, இதுபோன்ற அரசு மருத்துவமனைகளே அவர்களுக்கான சிகிச்சையை தரமாக தந்து கொண்டிருக்கிறது..

எக்ஸ்ரே, மார்ச்சுவரி
எனினும் அரசு மருத்துவமனைகளில், சிலர் பணத்தை பறிப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே உள்ளன.. குறிப்பாக, அரசு மருத்துவமனை ஸ்கேன் எடுக்கும் மையங்கள், எக்ஸ்ரே எடுக்கும் பிரிவுகள், மகப்பேறு சிகிச்சை பிரிவுகள், பிணவறைகள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் பணத்தை பறிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
நார்மல் டெலிவரி நடக்க வேண்டுமானால் இதற்கும் நர்ஸுகளுக்கு பணம் தர வேண்டுமாம். இல்லாவிட்டால் சிசேரியன் பண்ணி செலவை இழுப்பார்களாம். நோயாளிகளுக்கு துணையாக வருபவர்கள் மருத்துவமனையில் தூங்கும்போதும் பணம் கறப்பார்களாம்.
அரசு மருத்துவமனை
இப்படியெல்லாம் பல புகார்கள், சம்பந்தப்பட்ட மருத்துவமனை டீன்களுக்கே சென்றன.. அதற்கு பிறகே அனைவரும் ஒன்றிணைந்து இதில் அதிரடி காட்டினார்கள்.. சிசிடிவி கேமராக்கள் முதல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, தற்போது லஞ்சம்புழங்குவதை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் அரசு மருத்துவமனை டீன்கள்..
எனினும் பாலியல் புகார்கள் ஆங்காங்கே முளைத்தபடி உள்ளன.. அரசு மருத்துவமனை என்பது தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள்.. அந்தவகையில், எப்போதுமே பரபரப்பாக மருத்துவமனை காணப்படும்.. அப்படியிருந்தும்கூட பாலியல் சீண்டல்கள் துணிச்சலாக நடப்பது தொடர்கதையாகி வருவது, மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதோ இந்த சென்னை சம்பவத்தை பாருங்கள்..
வலது கால் பாதம்
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தனது வலது கால் பாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கட்டு போட்டிருந்தார்.. இதனால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை.. மருத்துவமனைக்கு சென்று வருவதிலும் அவருக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்துள்ளன..
இதன் காரணமாக மருத்துவமனை செல்வதில் சிரமம் இருந்ததால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக (ஊழியர்) பணி செய்து வரும் கொடுங்கையூரைச் சேர்ந்த சேகர் (58) என்பவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு காலில் டிரஸ்ஸிங் செய்து வந்தார்.
சில்மிஷங்கள்
இந்நிலையில் கடந்த 21-ம் தேதி மதிய வேளையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு டிரஸ்ஸிங் செய்வதற்காக சென்றார் சேகர்.. அங்கு அந்த பெண்ணும் அவரது பேரனும் மட்டுமே தனியாக இருந்தனர்.. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியான சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்..
இந்த அநாகரீகமான செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக ஆர்.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்..
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. இந்தப் புகாரின் அடிப்படையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வார்டு ஊழியர் சேகரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.. எனினும் அரசு மருத்துவமனை ஊழியர் செய்த இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை...!!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications