ஆளுநரின் கருத்துக்களை நிராகரிக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்.. அதிரடி காட்டிய ஸ்டாலின்
சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீதான ஆளுநர் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் கருத்தை நிராகரிக்க முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மனம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேறியது.
தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி கொடுக்காமல் இருந்தார். இந்த சூழலில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவை இன்று மீண்டும் தாக்கல் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

சட்டசபையில் தாக்கல்
இந்த சட்ட முன்வடிவை சட்டசபையில் ஆய்வு செய்வதற்கு ஆளுநரின் பரிந்துரையை பெற வேண்டும் என்பதால் அவருக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஆளுநர் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். ஆனால் ஆளுநருக்கு கருத்து தெரிவிக்க அதிகாரம் இல்லை என்று அரசு கருதியது. இதைத் தொடர்ந்து இன்று சட்டசபையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
முன்னதாக சட்டசபையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு அறிமுகம் செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- "2025-ம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்வதற்கு தாங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை அழைத்துள்ளீர்கள். அவரும் தற்போது இச்சட்ட முன்வடிவை அறிமுகம் செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இச்சட்ட முன்வடிவு சம்பந்தமான ஒரு செய்தியை பேரவையின் முன்வைக்க விரும்புகிறேன். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவானது, நிதிச் சட்ட முன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வருகின்ற காரணத்தால், இச்சட்ட முன்வடிவினைப் பேரவையில் ஆய்வு செய்வதற்கு அரசமைப்புச் சட்டம் கூறு 207(3)-ன் கீழ் கவர்னரின் பரிந்துரை பெறப்பட வேண்டும்.
பொதுமக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, மக்களாட்சியின் ஒரு தூணாகக் கருதப்படும் நிர்வாகத்தால், மக்கள் நல்வாழ்வுத் துறையால் வரைவு சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத் துறையால் சரிபார்க்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு, மேற்கண்ட சட்ட முன்வடிவின் அச்சடிக்கப்பட்ட பிரதிகை கவர்னருக்கு இணைத்து அனுப்பப்பட்டது.
வாக்கெடுப்பு கோர அதிகாரம்
ஆனால், ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல், இச்சட்ட முன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்து, அந்தக் கருத்துகள் இச்சட்ட முன்வடிவு பேரவையில் அறிமுகப்படுத்தப்படுகையில் பேரவை உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது அரசமைப்புச் சட்டத்திற்கும், நமது சட்டப்பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது. ஒரு சட்ட முன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்குமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில் வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
இத்தகைய சட்ட முன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநரிடமிருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துகளை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது.
மேலும், "கன்சிடரேசன்" என்று சொல்ல வேண்டிய ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக "அப்ரோப்ரியேட் கன்சிடரேசன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதில் "அப்ரோப்ரியேட்" எனும் வார்த்தைக்கு என்ன பொருள்? "பொருத்தமான" அல்லது "தகுந்த" முறையில் ஆய்வு செய்ய வேண்டும்" என்று பொருள். இப்பேரவை சட்ட முன்வடிவுகளை "பொருத்தமற்ற முறையில்" அல்லது "தகுந்த முறையில் அல்லாமல்" ஆய்வு செய்யும் தொனியில், "பொருத்தமான" அல்லது "தகுந்த" எனும் பொருள்படக்கூடிய வார்த்தையை சேர்த்திருப்பது, இந்தப் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து என்பதால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா
சட்டம் இயற்றுவது இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், அந்தக் கருத்துகளை நான் இங்கே பதிவுசெய்ய விரும்பவில்லை.
எனவே, "2025-ம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை பேரவையில் ஆய்வு செய்வதற்கு கவர்னர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது" என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்." என்றார். இதைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications