காந்தி குறித்து ஆளுநர் சொல்லியிருப்பது வன்மம் கலந்த நோக்கமே.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: 'காந்தியால் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை' என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான் என்று முதல்வர் மு க ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பங்கேற்று பேசினார். அப்போது, மகாத்மா காந்தி குறித்து ஆளுநர் பேசிய கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளானது. எனினும் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த ஆளுநர், மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. காந்தியை நான் மதிக்கிறேன்.

அவருடைய போதனைகள் எனது வாழ்வில் பயனுள்ளதாக இருந்தன. காந்தியை அவமதித்துவி ட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், காந்தி குறித்த ஆளுநரின் பேச்சுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
75 ஆண்டுகள் ஆனபிறகும்: "என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தி. தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர்வுக்கும் மரியாதை கொடுத்தவர் அவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்றவர்.
ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார். 75 ஆண்டுகள் ஆனபிறகும், காந்தி மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காந்தியை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை. 'காந்தியால் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை' என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்.
மதநல்லிணக்க நாளாக: தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியை, பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாத சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும். மதநல்லிணக்கத்தின் அடையாளமான காந்தி, மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. எனவே, வருகிற 30 ஆம் தேதியன்று மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி: காந்தியின் பிறந்தநாளை 'சுவச்ச பாரத் அபியான்' என மாற்றியதில் இருக்கிறது, இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2 ஆம் தேதி ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு திசைதிருப்ப பார்த்தது. அதனைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை. எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும், மக்களின் மனதில் குடியிருக்கிறார் காந்தி.
நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை வருகிற 30 ஆம் தேதியன்று மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்க செய்ய வேண்டும்.
எல்லோர்க்கும் எல்லாம்: வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பையும் மத்திய அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம்! வாழ்க காந்தியின் புகழ். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications