ஆளுநர் இனியும் ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் விஜய்க்கு இருப்பது ஒரே சான்ஸ்தான்! என்ன செய்ய போகிறார்?
சென்னை: பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தை சொல்லி விஜய்யை இதுவரை ஆளுநர் அர்லேகர் அழைக்காமல் இருந்தார். ஆனால் இன்று பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதையடுத்து ஆளுநரை விஜய் இன்று சந்தித்து 120 பேரின் ஆதரவு இருப்பதாக ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். பெரும்பான்மையை காட்டிய நிலையில் ஆளுநர் இனியும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் இருந்தால், விஜய் இனி நீதிமன்றத்தின் கதவை தட்டுவதை தவிர அவருக்கு வேறு வழியே இல்லை என்றே தெரிகிறது.
தமிழக அரசியல் களத்தில் நொடிக்கு நொடி பரபரப்பான சூழல் இருந்து வருகிறது. இன்று மாலை வரை விஜய் பெரும்பான்மைக்காக போராடி வந்த நிலையில், தற்போது பெரும்பான்மை 120 என கிடைத்துள்ளது. இதையடுத்து மீண்டும் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்துள்ளார். இதனால் அவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மை இல்லை. கடந்த 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 5வது நாளாக இன்னும் பரபரப்புடனேயே அரசியல் களம் நகர்ந்து வருகிறது. விஜய் ஆட்சி அமைப்பாரா இல்லையா என தினம் தினம் பரபரப்பு இருந்துகொண்டே இருக்கிறது.
முதல் ஆளாக காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு மட்டுமின்றி கூட்டணியே வைப்பதாக கூறியது. இதனால் தவெகவினர் உற்சாகமடைந்தனர். அந்த சூட்டோடு சூடாக விஜய்யும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறினார். ஆனால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. மேலும் அதற்கான காரணமும் சொல்லவில்லை. இதனால் இரண்டாவது முறையாக விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறினார்.
அப்போது ஆளுநர் அர்லேகர் விஜய் பெரும்பான்மை எண்ணிக்கையை காட்டவில்லை அதனாலே அழைப்பு விடுக்கவில்லை என கூறினார். இதனால் மீண்டும் விஜய் தரப்பினர் கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் கம்யூனிஸ்டுகள் சிபிஐ, சிபிஎம் ஆதரவு கடிதம் அளித்த நிலையில் உடனே விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறினார். ஆனால் அப்போதுவிஜய்க்கு பெரும்பான்மை 116 ஆகவே இருந்தது. இதனால் அப்போது விஜய்யை ஆளுநர் அழைக்கவில்லை.
விஜய் மூன்று முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் இதுவரை அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றதால் அந்த கட்சிக்கே அழைப்பு விடுக்க வேண்டும் என்ற விதி இருப்பதாகவும் ஆனால் ஜனநாயக விதியை மீறி ஆளுநர் செயல்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
ஆனால் மெஜாரிட்டி இருந்தால்தான் அழைப்பேன் என்று ஆளுநர் கூறினார். தற்போது விஜய்க்கு பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்துவிட்டது. பெரும்பான்மை எண்ணிக்கையுடன் விஜய் ஆளுநரை சந்திப்பதால் அவருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்ப்ட்ட நிலையில், விஜய்யை சந்திக்க அனுமதி மறுத்துள்ளார் ஆளுநர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே திடீரென கேரள பயணத்தை ரத்து செய்த ஆளுநர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கினார். இதன்படி விஜய்யும் தற்போது ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறியுள்ளார்.
பெரும்பான்மையை காட்டியுள்ள நிலையில் இன்று இரவே விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம் என தெரிகிறது. அதே சமயம் மீண்டும் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருந்தால், விஜய் இனி நீதிமன்றத்தின் கதவை தட்டுவதை தவிர அவருக்கு வேறு வழியே இல்லை என்றே தெரிகிறது. அதே நேரத்தில் நீதிமன்றத்திற்கு சென்றால் ஆளுநர் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்படும். இதனால், தற்போது நீடித்து வரும் அரசியல் பரபரப்பு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது. இதனால் விஜய் பதவியேற்பு விழா எப்போது நடைபெறும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப்பெருந்தகை மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் விஜய்யுடன் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
-
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
‘குடும்பம் முக்கியம் என்பதை நீங்க காட்டணும்’.. பதவியேற்பில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய்க்கு சமுத்திரக்கனி அறிவுரை -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்










Click it and Unblock the Notifications