பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகத்தை அகற்ற சதி நடக்கிறது.. ஆளுநர் ரவி பரபர பேச்சு
சென்னை: "பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சைவ சித்தாந்த மாநாட்டில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மயிலாடுதுறை ஆதினம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் அனைத்துலக 6-ஆவது சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவருடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், துணை வேந்தர், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், சிவாச்சாரியர்கள், ஆதினங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம். அதில் சமுதாய வேறுபாடு கிடையாது. பக்தி நிலையிலேயே சிவனை அடைய முடியும்; பக்தியின் மூலம் ஆன்மீகம் காப்பாற்றப்படுகிறது.
சனாதன தர்மமே ஆன்மீகத்தின் அடையாளம். அனைவரும் ஒன்று என சனாதனம் வலியுறுத்துகிறது. ஆன்மீகம் அறிவியல்பூர்வமானதாக இல்லை எனக்கூறி அதை அழிக்க நினைக்கிறார்கள். பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது. சிவபெருமானை அழிப்பது சாத்தியமில்லை.
காஷ்மீரோ, தமிழகமோ... சைவ சித்தாந்தத்தை பரப்புவது முக்கியமானதாக கடந்த காலத்தில் இருந்தது. மாநில மொழியில் இலக்கியம் வளர்த்தது சைவ சிந்தாந்தம். அதன் மூலம் எளிய மக்களுக்கும் சென்று பயன் பெற்றதது. " என ஆளுநர் ரவி சைவ சித்தாந்த மாநாட்டில் பேசி இருக்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக சனாதனம், ஆன்மீகம் சார்ந்து பேசி வருவதால் திமுக அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு வெடித்து வருகிறது. இவர்களுக்கு இடையேயான மோதல் சட்டமன்றத்திலும் வெடித்தது. திமுக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரைக் கண்டித்ததோடு, 10 மசோதாக்களுக்கு தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications