திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆளுநர் ரவி..? “லாஜிக்கே இடிக்குதே”.. சொல்றது யார்னு பாருங்க..!
ஆளுநர் செய்தது லாஜிக் அற்ற செயல் என அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் விமர்சித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பி திமுகவுக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன்.
கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கடந்த 8-ம் தேதி ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பு, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது என்றும் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்புவோம். இரண்டாவது முறையாக அனுப்பும்போது, அதை ஆளுநர் நிராகரிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுமந்த் சி ராமன் ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டி இனி..

கேள்விக்குறி
கேள்வி : ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவில் மேலும் விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார்.. இதையடுத்து மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
சுமந்த் சி ராமன் : ஆளுநர் என்ன காரணத்திற்காக இதை நிராகரித்தேன் என்பதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நீதிமன்றத்தில் இந்தச் சட்டம் எந்தளவுக்கு செல்லும் என்பது கேள்விக்குறி. மீண்டும் சட்டமன்றத்தில் அதனை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அவர் கையெழுத்துப் போட்டுத்தான் ஆகவேண்டும். அவர் கையெழுத்து போட்டபிறகு அது சட்டமாகிவிடும். உடனடியாக, ஆன்லைன் கேம் நிறுவனங்கள் தரப்பு நீதிமன்றத்திற்குச் செல்வார்கள். அங்கு இந்த சட்டத்தை நீதிமன்றம் செல்லாது என்று அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆளுநர் ஏன் இப்படிச் செய்தார்
கேள்வி : மாநில அரசுக்கு இந்த சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.. ஆனால், தமிழ்நாடு அரசு, நீதிமன்ற தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறுகிறதே..
சுமந்த் சி ராமன் : ஆளுநர் ஏன் இப்படிச் செய்தார் என்றே தெரியவில்லை. திமுக அரசு முயற்சிக்கிறது, ஆனால் ஆளுநர் கையெழுத்துப் போட மறுக்கிறார் என அது திமுகவுக்குத்தான் மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநர் அவர்பாட்டுக்கு கையெழுத்து போடலாம், அது எப்படியும் கோர்ட்டில் நிற்காது. மாநில அரசுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ரம்மி என்பது திறமையின் அடிப்படையிலான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த சூதாட்டம் என்பது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் விளையாடக்கூடிய விளையாட்டு. அதில் சிஸ்டம் மூலம் விளையாடுவதில் முறைகேடு செய்திருக்கிறார்களா என கேள்வி எழுப்பினால், இந்த விளையாட்டுகளை வரைமுறைப்படுத்த வாய்ப்பாக அமையும்.

நடைமுறை சிக்கல்கள்
அவர்கள் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டினால் அதற்கு ஆதாரம் வைக்க வேண்டும். சட்டரீதியாக இந்த விளையாட்டு கேம் ஆஃப் ஸ்கில் என நிரூபிக்கப்பட்டபிறகு இதனை கேம் ஆஃப் சான்ஸ் ஆக காட்டுவது என்பது கடினமான முயற்சி. ஒருவேளை இந்த சட்டம் செல்லும் அறிவித்து விட்டாலும், ஒரு மாநிலத்தில் மட்டும் இதனை எப்படி தடை செய்யப்போகிறீர்கள்? கேரளாவிலும், கர்நாடகாவிலும் சட்டம் போட்டு நீதிமன்றத்தில் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. தெலுங்கானாவில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஒரு மாநிலத்தில் மட்டும் ஒரு செயலியை முடக்க ஜியோ லொகேஷன் பிளாக்கிங் என்ற தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், அதை தகர்க்க இன்று நிறைய வழிகள் இருக்கின்றன. எனவே, இதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.

திமுக அரசுக்கு உதவ
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் தினமும் புதிதாக ஆப்கள் வருகின்றன. ஒன்றை தடை செய்தால் இன்னொன்று வரும், அரசு நிரந்தரமாக ஒரு குழு அமைத்து, புதிதாக என்ன செயலி வருகிறது என்று கண்காணித்து தடை செய்துகொண்டே இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஒரு கேமிங் செயலியை உருவாக்கும் நிறுவனம் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று, ஒவ்வொரு மாநில அரசிடமும் அனுமதி பெற வேண்டும் என்று சொல்ல முடியுமா? சட்ட ரீதியான சிக்கல்களும், நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன. ஆளுநர் ஏன் இப்படிச் செய்தார் என்று புரியவில்லை. திமுக அரசுக்கு உதவ வேண்டும் என்று நினைத்துச் செய்திருந்தால் தவிர, வேறு காரணமில்லை.

ரகசியமாக சந்திக்கவில்லை
கேள்வி : ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆளுநரை ரகசியமாகச் சந்தித்துள்ளனர், அதன் பிறகுதான் ஆளுநர் இந்த மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார் என்று அமைச்சர் குற்றம்சாட்டி இருக்கிறாரே..?
சுமந்த் சி ராமன் : ஆளுநர் ரகசியமாகவெல்லாம் சந்திக்கவில்லை. ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அடுத்த நாளே தகவல்கள் வெளியே வந்துவிட்டன. ஆனால், ஆளுநர் அவர்களைச் சந்தித்ததை தவிர்த்திருக்க வேண்டும். இந்த சட்டம் கோர்ட்டில் நிற்காது என்று ஆளுநருக்குத் தெரியும். கையெழுத்தைப் போட்டுவிட்டு போயிருக்கலாம். என்ன காரணத்திற்காக இவ்வளவு நாளாக அந்த மசோதாவை கையெழுத்தும் போடாமல், திருப்பியும் அனுப்பாமல் வைத்திருந்தார்? ஏன் முதலில் அவசர சட்டத்துக்கு மட்டும் ஒப்புதல் அளித்தார்?

லாஜிக்கே இல்லாத ஆளுநரின் செயல்
இப்போது திருப்பி மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் கையெழுத்து போட்டாக வேண்டிய நிலை உள்ளது. ஆளுநர் கையெழுத்து போட்டு, அது கோர்ட்டில் செல்லாமல் போயிருந்தால், அரசு மீதுதானே மக்கள் கோபப்படுவார்கள்? அதைவிட்டுவிட்டு தம் மீது மக்கள் கோபம் திரும்பும் வகையில், திமுக அரசுக்கு அனுதாபம் தேடிக் கொடுக்கிறார் ஆளுநர். இப்போது திமுக அரசு, ஆன்லைன் சூதாட்டங்களால் நிகழ்ந்த 44 தற்கொலைகளுக்கும் ஆளுநர் தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை ஆளுநர் செய்தது லாஜிக்கே இல்லாத செயல். நிஜமாகவே ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு சாதகமாக ஆளுநர் செயல்பட நினைத்தால் எதற்காக இப்போது திருப்பி அனுப்பவேண்டும்? அவருக்கு எதுவும் காலக்கெடு இருக்கிறதா? நீட் மசோதா போல ஆண்டுக்கணக்கில் நிலுவையிலேயே வைத்திருக்கலாமே? எந்த வகையில் பார்த்தாலும் ஆளுநர் செய்தது லாஜிக் அற்ற செயல்.
-
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார்












Click it and Unblock the Notifications