தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே திருப்பியனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதன்படி இனி அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் நீட் மூலமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.

அதிமுக அரசு
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. இது தொடர்பாகக் கடந்த அதிமுக ஆட்சியிலேயே மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் அது நிறைவேறவில்லை. நீட் விலக்கு விவகாரத்தை திமுக அரசு பிரசாரத்தில் வலுவாக முன்னெடுத்தது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நீட் விலக்கு தொடர்பாகப் பல இடங்களிலும் பேசினார்.

திமுக நீட் மசோதா
ஆட்சி அமைத்தவுடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நீட் பாதிப்பு குறித்த தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதை எல்லாம் அடிப்படையாக வைத்தே திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவை தயார் செய்திருந்தது. இந்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.

ஆளுநர் திருப்பி அனுப்பினார்
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி! பிப்ரவரி 1ம் தேதியே தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துவிட்டதாக ஆளுநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எதிராக உள்ளது
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும் இது தொடர்பாக மாநில அரசு அமைத்திருந்த உயர்மட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆளுநர் விரிவாக ஆராய்ந்தார். நீட் தேர்வு வருவதற்கு முன்பு, ஏழை மற்றும் சமூக ரீதியில் பின்தங்கி இருந்த மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ இடங்களில் சேர்ந்தனர் என்பதை ஆராயும்போது இந்த மசோதா ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளது.

உச்ச நீதிமன்றம்
எனவே, இந்த மசோதாவை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திரும்பி அனுப்பியுள்ளார். மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கான காரணங்களைக் கடந்த பிப். 1ஆம் தேதி விளக்கப்பட்டுள்ளது. வேலூர் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கில் சமூக நீதி தொடர்பான விவகாரத்தை தீவிரமாக ஆராய்ந்தே நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஏனென்றால் நீட் தேர்வு பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி. சமூக நீதியை உறுதி செய்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications