ஆட்டு தாடி.. சீறிய ஸ்டாலின்.. ஆளுநர் கூப்பிட்டா என்கிட்டே சொல்லுங்க.. கொதித்த மம்தா -2 பக்கமும் அடி
சென்னை: ஒரே நேரத்தில் இரண்டு மாநில முதல்வர்கள் தற்போது தங்கள் மாநில ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கி உள்ளனர். ஒருவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.. இன்னொருவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் திரும்பி அனுப்பி உள்ளார்.
தமிழ்நாடு ஆளும் தரப்பை இந்த நடவடிக்கை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும், அந்த பதவியே தேவை இல்லாதது என்று திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்பி உள்ளனர்.

திமுக எம்பிக்கள்
இதையடுத்து ராஜ்யசபாவில் இன்று திமுக எம்பிக்கள் ஆளுநர் ரவிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதோடு திமுக எம்எல்ஏக்கள் பலர் ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இது போக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நாளை ஆளுநர் மளிகை முன் போராட்டம் நடத்த உள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலினும் ஆளுநருக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று இதை பற்றி காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஆட்டுக்குத் தாடி
அதில், பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன். இந்த சட்ட முன்வடிவை மீண்டும் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யும் முடிவை அரசு எடுக்கும். வரும் 5ம் தேதி இதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் .

மேற்கு வங்கம்
இங்கே தமிழ்நாடு முதல்வர் ஆளுநரை எதிர்த்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் மேற்கு வங்கத்திலும் ஆளுநர் முதல்வர் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் இருந்தே மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும் மோதல் நிலவி வருகிறது. அங்கு ஆளுநர் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி வருகிறார். முதலில் மேற்கு வங்க கலவரத்தில் ஆளுநர் தனது தலையை நுழைக்க முயன்று விசாரணை ரிப்போர்ட் கேட்டதாக புகார்கள் வைக்கப்பட்டது.

புகார் மேல் புகார்
அதன்பின் கொஞ்சம் நாட்கள் அடங்கி இருந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் தலைமை செயலாளரையும், டிஜிபியையும் ஆளுநர் ஜெகதீப் தங்கார் கட்டுப்படுத்த முயல்வதாக முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் என்னுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். ஆளுநருக்கு இந்த அதிகாரம் இல்லை என்பதால், ஆளுநர் ஜெகதீப் தங்கார் தற்போது தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு எதிராக பொய்யாக ட்விட்டரில் புகார் அளித்து வருவதாக மம்தா குற்றஞ்சாட்டி உள்ளார்.

நாங்கள் அடிமை இல்லை
தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஜெகதீப் தங்கார் கட்டுப்படுத்த பார்க்கிறார்.. அது வேலைக்கு ஆகவில்லை என்றதும் அரசுக்கு எதிராக தினமும் ட்விட்டரில் எதையாவது ஆளுநர் உளறிக்கொண்டு இருக்கிறார். அவர்தான் பெரிய பவர்புல் போல நினைக்கிறார். அவரை விட முதல்வருக்குதான் அதிகாரம் அதிகம் உள்ளது. அவருக்கு நாங்கள் அடிமை இல்லை.

பிளாக்
அவரை நான் இப்போது பிளாக் செய்துவிட்டேன் என்று மம்தா சீற்றமாக குறிப்பிட்டுள்ளார். அதோடு ஆளுநரை உடனே பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மம்தா கோரிக்கை விடுத்தது வருகிறார். இது போக போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த மீட்டிங் ஒன்றில் கிழக்கு மித்னாபூர் எஸ்பியிடம் மம்தா கோபமாக பேசினார். அது பாஜக தலைவர் சுவேண்டு அதிகாரியின் சொந்த ஊர் ஆகும். அந்த பகுதி எஸ்பியிடம் கோபமாக பேசிய மம்தா, உங்கள் பகுதியில் பணிகள் சரியாக நடக்கவில்லை.

மாநில பணி
நான் போடும் உத்தரவுகள் அமலுக்கு வரவில்லை. உங்களுக்கு அரசியல் நெருக்கடி வந்தால் என்னிடம் சொல்லுங்கள். கவர்னர் உங்களை கூப்பிட்டால் என்னிடம் சொல்லுங்கள். அவர் உங்களிடம் பேசினால் என்னிடம் சொல்லுங்கள்.. அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் போலீஸ். நீங்கள் மாநில பணியில் இருக்கிறீர்கள். நீங்கள் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். ஏதாவது அரசியல் அழுத்தம் வந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று ஜெகதீப் தங்காருக்கு எதிராக மம்தா காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

என்னிடம் சொல்லுங்கள்
ஒரு பக்கம் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆளுனர் ஆர். என் ரவிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநரை திரும்பி பெற வேண்டும் என்று தமிழ்நாடு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதே கோரிக்கை மேற்கு வங்கத்திலும் உச்சம் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்திலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. ஒரே சமயத்தில் இரண்டு பெரிய மாநிலங்களில் நடக்கும் இந்த அதிகார மோதல் தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications